முதல் அமைச்சர் ஜெயலலிதா 19.03.2012 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
19.3.2012 அன்று நாடாளுமன்ற மக்களவையில் பிரதமர் அவர்கள், அமெரிக்காவால் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானத்தின் இறுதி வடிவம் தன்னிடம் இல்லை என்று கூறிவிட்டு, தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்கும் மனப்பாங்கில் இந்திய அரசு உள்ளதாகவும், அது இலங்கைத் தமிழர்களுக்கு சுயமரியாதை, சம அந்தஸ்து, கண்ணியம் இவற்றுடன் கூடிய எதிர்காலத்தை நிர்ணயிக்க வேண்டும் என்ற இந்தியாவின் குறிக்கோளுக்கு ஏற்றதாக இருக்கும் என்று தான் தெரிவித்துள்ளார்.
இந்த பதிலில் பிரதமர் அவர்கள் மனித உரிமைகள் மீறப்பட்டது குறித்து எதையுமே குறிப்பிடவில்லை. மனித உரிமைகள் மீறலுக்காக இலங்கை அரசு கண்டிக்கப்படும் என்றும் கூறவில்லை. இது ஒரு மழுப்பலான, பயனில்லாத ஒரு பதில் தான். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஜெயலலிதாவும் சீமானும் சொல்வது சரியானதே.பிரதமரின் பேச்சை நன்கு கவனிக்க வேண்டும்.ஒன்று தீர்மானத்தை அவர் படிக்கவில்லை என்றது.யாருக்கும் தெரியாது தனியான தூதுவர் ஒருவரை இலங்கைக்கு உடனடியாக அனுப்பியது ஏன்?. இவை எல்லாம் மக்களை திசை திருப்பவும்,கூட்டணிக் கட்சிக்கு அல்வா கொடுப்பதற்கும் தான்.இது கருணானிதிக்கும்,தமிழக காங்கிரசுக்கும் தெரிந்திருந்தும் மக்களை ஏமாற்றுகிறார்கள்.
ReplyDelete