Tuesday, November 18, 2014

20 இலங்கை அகதிகள் தற்கொலை முயற்சி! பரபரப்பு செய்தி

திருச்சியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் தங்கியிருந்த 20 இலங்கைத் தமிழர்கள்  தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.

திருச்சியில் உள்ள சிறப்பு அகதிகள் முகாமில், பல்வேறு குற்றங்களின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு ஏராளமான இலங்கை அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும், தங்களை வேறு முகாமிற்கு மாற்றக் கோரிகடந்த 4 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில், தமிழக அரசுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் விரக்தி அடைந்து 20 பேர் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.


இதனையடுத்து இவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


No comments:

Post a Comment