தமிழகத்தைச்
சேர்ந்த 5 மீனவர்களுக்கு இலங்கை அரசு தூக்கு
தண்டனை விதித்திருப்பதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்
நடிகர் கமல் ஹாஸன்.
2011-ம் ஆண்டு கடலில்
மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் சிலரை
சிங்கள கடற்படை கைது செய்தது.
இவர்களில் 5 பேருக்கு கொழும்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.
அவர்கள் மீது பொய்யான வழக்குகளைச்
சுமத்தில் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக
தமிழகத்தில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தூக்கு குறித்து
நடிகர் கமல்ஹாஸனிடம் தொலைக்காட்சி நிருபர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு
பதிலளித்த கமல் ஹாஸன் மிகுந்த
உணர்ச்சி வசப்பட்டார். இதைவிடக் கேவலம், மனித உரிமை
மீறல் எதுவும் இருக்காது என்ற
கமல்ஹாஸன், இலங்கையின் இந்த நடவடிக்கை மனிதாபிமானத்துக்கும்
மனித குலத்துக்கும் விடுக்கப்பட்ட சவால் என்றார்.
இந்திய
அரசு உடனடியாக இதனைத் தடுத்து நிறுத்தி
5 உயிர்களையும் காக்க வேண்டும் என்றும்
அவர் கோரிக்கைவிடுத்தார். இல்லையென்றால், இங்கு அரசு என்ற
ஒன்று இருப்பதற்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும் என்றார் கமல்.
No comments:
Post a Comment