வட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று
வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
விடுத்துள்ள நிலையில் தமிழகத்தில் நாகை, திருவாரூர், தஞ்சாவூர்,
கடலூர், விழுப்புரம்,
காரைக்கால், திருவண்ணாமலை
உள்ளிட்ட 7 மாவட்ட பள்ளிகளுக்கும் விடுமுறை
அறிவித்து மாவட்ட
ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். தொடர்
கனமழை காரணமாக
விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்
கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு
நிலை வட மேற்கு திசையில்
நகர்வதால் தமிழக கடலோரப் பகுதியில்
மேலும் இரண்டு நாட்களுக்கு கனமழை
பெய்யும் என்று
சென்னை வானிலை ஆய்வு மையம்
தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் கடந்த
இரண்டு நாட்களுக்கு முன்பு தென் கிழக்கு
திசையில் இலங்கை-அந்தமான் இடையே
காற்றழுத்தம் உருவானது. அது மேலும் வலுப்பெற்று
காற்றழுத்த தாழ்வு நிலையாக உருவானது.
அதன் காரணமாக தமிழகத்தில் பரவலாக
மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக
நேற்று மதுரை, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய
இடங்களில் 130 மிமீ மழை பெய்துள்ளது.
சிவகாசி 11 மிமீ, பேரையூர் 90 மிமீ,
திருமங்கலம், திருச்சுழி 80 மிமீ, கூடலூர், உதகமண்டலம் 70 மிமீ,
அருப்புக்கோட்டை 60 மிமீ, தேவக்கோட்டை, சாத்தூர்,
சிதம்பரம், விருதுநகர் 50 மிமீ, பரங்கிப்பேட்டை, மணிமுத்தாறு
, சீர்காழி, சோழவரம் 40 மிமீ, ராமநாதபுரம், முதுகுளத்தூர்,
ராசிபுரம், நெய்வேலி, மானாமதுரை, செங்குன்றம், சேத்தியாதோப்பு, கடலாடி, வாணியம்பாடி, பெரியாறு,
பொன்னேரி, மாதவரம், புதுச்சேரி, தரங்கம்பாடி, போளூர், கோவில்பட்டி, பேச்சிப்பாறை,
மயிலாடு துறை, விருத்தாசலம், ஸ்ரீமுஷ்ணம்,
கடலூர், எண்ணூர், விழுப்புரம், சங்கராபுரம், ராஜாபாளையம் 20 மிமீ மழை பெய்துள்ளது.
இந்நிலையில்,
வங்கக் கடலில் தென் மேற்கு
திசையில் நகர்ந்த காற்றழுத்த தாழ்வு
நிலை மத்திய மேற்கு வங்கக்
கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது. இது
மேலும் வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் கடலோர
மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்.
இதையடுத்து அந்த காற்றழுத்த தாழ்வு
நிலை மேலும் வலுப்பெற்று மேற்கு
திசையில் நகரும். அப்படி நகரும்
போது கடலோரப் பகுதியைப் போல
உள் தமிழகத்திலும் கனமழை பெய்யும். இது
இரண்டு நாட்களுக்கு நீடிக்கும். சென்னையில் பொதுவாக மேகமூட்டம் காணப்படும்.
நகரில் சில இடங்களில் லேசானது
முதல் கனமழை வரை பெய்யும்.
காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக
கடலில் மணிக்கு 45 கிமீ வேகம் முதல்
55 கிமீ வேகம் வரை காற்று
வீசும். கடலில் சீற்றம் அதிகமாக
இருக்கும் என்பதால் கடலோரப் பகுதியில் அலைகள்
கரைப் பகுதியை தொடுகின்ற அளவுக்கு
இருக்கும். தாழ்வான பகுதிகளில் கடல்
நீரும் புகும் நிலை ஏற்படும்.
No comments:
Post a Comment