கே.பாக்யராஜிடம் கதை சொல்லப்போயிருக்கிறார் ‘மத்திய சென்னை’
பட இயக்குனர் விவேகானந்தன். இவர் சொன்ன கதையும்,
பாக்ய ராஜ் அடுத்து படம்
இயக்குவதற்கான கதையும் அரசியல் சார்ந்தே
இருந்தன.
‘‘உங்கள்
படத்தில் நான் நடித்தால், எனது
படத்தில் உங்கள் பட தாக்கம்
இருப்பதாகச் சொல்வார்கள்’’ என்று சொல்லியிருக்கிறார் பாக்யராஜ்.
‘‘நீங்கள் எழுதும் கதை, திரைக்கதை,
வசனத்தை வைத்து நான் இயக்குகிறேன்’’
என்று சொல்லியிருக்கிறார் விவேகானந்தன். அப்படி உருவானதுதான் ‘துணை
முதல்வர்’ படம். காமெடி கலந்த
இந்த அரசியல் கதையில் பாக்யராஜ்
ஜோடியாக ஸ்வேதா மேனன் நடித்துள்ளார்.
பாக்யராஜின் நண்பராக நடிக்கும் ஜெயராமின்
ஜோடியாக ‘காதல்’ சந்தியா நடிக்கிறார்.
கார்த்திக்ராஜா
ஒளிப்பதிவு செய்கிறார். ஜெய், பிரதீப், பாலாஜி
என மூன்றுபேர் இசையமைக்க, நா.முத்துக்குமார், கதிர்மொழி,
அருண்பாரதி, ஜெயமுரசு பாடல்கள் எழுதுகிறார்கள்.அனுக்கிரகதா ஆர்ட் பிலிம்ஸ் சார்பில்
சங்கர், சுரேஷ்பாபு தயாரித்துள்ள இந்தப்படம் ஒகேனக்கல் மற்றும் சென்னைப் பகுதிகளில்
படமாக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment