பிரதமர்
மோடி தலைமையில் நடந்த கூட்டத்தில் நேருவின்
125–வது பிறந்த நாளை கோலாகலமாக
கொண்டாட முடிவு செய்யப்பட்டது.
நாட்டின்
முதல் பிரதமர் பண்டித ஜவகர்லால்
நேருவின் 125–வது பிறந்த நாளை
(வரும் 14–ந் தேதி) கோலாகலமாக
கொண்டாட முந்தைய காங்கிரஸ் கூட்டணி
அரசில் முடிவு எடுக்கப்பட்டு, விழாக்குழுவும்
அமைக்கப்பட்டது.
ஆனால் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட
நிலையில், பிரதமர் மோடி அந்தக்
குழுவை மாற்றி அமைத்தார். பிரதமர்
நரேந்திர மோடி தலைமையிலான புதிய
குழுவில் மத்திய மந்திரிகள் ராஜ்நாத்சிங்,
சுஷ்மா சுவராஜ், அருண்ஜெட்லி, காங்கிரஸ் தலைவர்கள் குலாம் நபி ஆசாத்,
மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டவர்கள் இடம்
பெற்றுள்ளனர். நேரு குடும்பத்தை சேர்ந்த
யாரும் இந்தக் குழுவில் இடம்
பெறவில்லை.
இந்தக்
குழுவின் கூட்டம் பிரதமர் நரேந்திர
மோடி தலைமையில் நேற்று நடந்தது. அதில்
பேசிய அவர், நேருவின் 125–வது
பிறந்த நாளை மிகவும் கோலாகலமாக
கொண்டாட வேண்டும், இது குறித்த விழிப்புணர்வை
மக்களிடம் பெரிய அளவில் ஏற்படுத்த
வேண்டும் என விருப்பம் தெரிவித்தார்.
நேரு நினைவு நாணயம் வெளியிடவும்,
‘பால சுவாச்தா மிஷன்’ திட்டத்தை நாடு
முழுவதிலும் உள்ள பள்ளிகளில் நவம்பர்
14–ந் தேதி முதல் 19–ந்
தேதி வரை செயல்படுத்தவும் இந்தக்
கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள
செய்திக்குறிப்பில், ‘‘நேருவின் 125–வது பிறந்த நாள்
என்ற சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, ‘சச்சா நேரு’வை
இளைய தலைமுறையினரிடம்கொண்டு போய் சேர்க்க
வேண்டும், அவரது வாழ்க்கையிலிருந்தும், உழைப்பிலிருந்தும் அவர்கள்
படிப்பினை பெறச்செய்ய வேண்டும் என பிரதமர் மோடி
கேட்டுக்கொண்டார்’’ என்று கூறப்பட்டுள்ளது.
‘‘சாதாரண
மக்களும் இந்த கொண்டாட்டங்களில் பங்கேற்கக்கூடிய
அளவுக்கு பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்ய வேண்டும்; இந்த
கொண்டாட்டத்தின் முக்கிய நோக்கமாக பள்ளி
குழந்தைகளிடம் அறிவியல் ஆர்வத்தை உண்டு பண்ண வேண்டும்’’
என்றும் பிரதமர் மோடி கூறியதாக
தகவல்கள் கூறுகின்றன.
No comments:
Post a Comment