Sunday, November 2, 2014

வெவ்வேறு ‘கெட்டப்’களில் நடித்துள்ளார் அஜீத் - கவுதம்மேனன் பேட்டி

அஜீத் படத்துக்கு என்னை அறிந்தால் என்று தலைப்பு வைக்கப்பட்டு இருப்பதாக டைரக்டர் கவுதம் மேனன் அறிவித்தார்.

55–வது படம்

அஜீத் நடிக்கும் 55–வது படத்தை கவுதம்மேனன் டைரக்டு செய்கிறார். இதில் நாயகிகளாக அனுஷ்கா, திரிஷா நடிக்கின்றனர். .எம்.ரத்னம் தயாரிக்கிறார். ஹாரீஸ்ஜெயராஜ் இசையமைக்கிறார்.

இந்த படத்துக்கு தலைப்பு வைக்காமலேயே நீண்ட நாட்களாக படப்பிடிப்பு நடந்தது. தலைப்பு என்ன என்பதை அறியும் ஆர்வத்தில் ரசிகர்கள் இருந்தனர்.

என்னை அறிந்தால்

இந்த நிலையில், படத்துக்குஎன்னை அறிந்தால்என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளதாக கவுதம்மேனன் அறிவித்தார். இதுகுறித்து கவுதம் மேனன் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:–

12 வயதில் இருந்து 25 மற்றும் 30, 40 வயது வரையிலான ஒருத்தரின் வாழ்க்கை பயணம் தான் கதை. அந்த கேரக்டர் அழுத்தமாக செதுக்கப்பட்டுள்ளது. மக்கள் மனதில் அது இறங்கி நிற்கும். நீ என்னை அறிந்தால் இப்படி பேசமாட்டாய், நீ என்னை அறிந்தால் இப்படி செய்யமாட்டாய் என்பதுபோல் கேரக்டர் இருக்கும்.

ஆக்ஷன்

எனவேதான்என்னை அறிந்தால்என்ற தலைப்பை தேர்வு செய்துள்ளோம். காதல், குடும்பம், சென்டி மென்ட், ஆக்ஷன் எல்லா விஷயங்களும் படத்தில் இருக்கும்.

படத்தில் அஜீத்தை இளமையாக காட்டி இருக்கிறேன் என்கிறார்கள். அவர் எப்படி இருக்கிறாரோ அப்படித்தான் படத்தில் வருகிறார். வாழ்க்கையில் உடற்பயிற்சி என்பது முக்கியம். தவறாமல் அதை செய்யவேண்டும் என்று அஜீத் என்னிடம் கூறுவது உண்டு. ஒரு வருடமாக அவர் சைவம் தான் சாப்பிடுகிறார். அவர் உடற்பயிற்சிகள் தொடர்ந்து செய்வதால் உடம்பு கட்டுகோப்பாகவும், அழகாகவும் இருக்கிறது. அதை இந்த படத்தில் பயன்படுத்தி இருக்கிறேன்.

அருண் விஜய் படத்தில் முக்கிய கேரக்டரில் வருகிறார். அவர் நல்லவரா, வில்லனா? என்று சொல்லமுடியாது. அஜீத்அருண் விஜய் கேரக்டர்கள் ஒரே மாதிரியாக பயணிக்கும். அருண் விஜய் சிறந்த நடிகர். அஜீத்தின் பாராட்டை பெற்றுள்ளார். இந்த படத்துக்குப்பிறகு பெரிய நிலைக்கு போவதற்கான வாய்ப்புள்ளது.

அனுஷ்காதிரிஷா

அனுஷ்கா, திரிஷா என இரு கதாநாயகிகள் படத்தில் உள்ளனர். இருவருக்கும் போட்டி என்பதெல்லாம் இல்லை. ஒற்றுமையாக நடித்தார்கள். நாயகனின் வாழ்க்கை பயணத்தின் ஒவ்வொரு கட்டத்தில் இவர்கள் வருகிறார்கள்.

ஹாரீஸ்ஜெயராஜ் அருமையான பாடல்களை கொடுத்துள்ளார். நான்கு பாடல்கள் முடிந்துள்ளது. அறிமுக பாடல் ஒன்றும், ஆக்ஷன் பாடல் ஒன்றும் படத்தில் இருக்கிறது.

பாடல்கள்

எங்கள் கூட்டணியில் எல்லா படங்களிலும் பாடல்கள் நன்றாக இருந்தன. இப்போது மறுபடியும் இணைந்துள்ளோம். இந்த படத்திலும் பாடல்கள் சிறப்பாக இருக்கும். பெரும் பகுதி படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இன்னும் 25 நாட்கள்தான் படப்பிடிப்பு நடத்தவேண்டும். இந்த வருடத்திலேயே படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம்.


இவ்வாறு கவுதம்மேனன் கூறினார்.


No comments:

Post a Comment