மது குடித்தாலும் மானத்தோடு வாழ்ந்திட எப்போதும் டவுசர் மாடல் ஜட்டிகளையே
தவறாமல் அணிய வேண்டும் என்று
குடிகாரர்களுக்காகவே ஏற்படுத்தப்பட்டுள்ள மது குடிப்போர் விழிப்புணர்வு
சங்கம் போஸ்டர் அடித்து கோரிக்கை
விடுத்துள்ளது.
குடிகார்கள்
குடித்ததும் முதலில் இழப்பது மானம்தான்.
காரணம், முட்ட முட்டக் குடித்து
விட்டு நடு ரோட்டிலும், சாக்கடையிலும்,
சாலையோரத்திலும், பிளாட்பாரத்திலும் விழுந்து புரளும் அவர்களின் உடை
அலங்கோலமாகி விடுவதால் மக்கள் அவர்களைக் காரித்
துப்பாத குறையாக கடந்து செல்வார்கள்.
இப்படி
விழுந்து கிடப்போரில் பலர் ஜட்டி கூட
போடுவதில்லை. போட்டாலும் அந்த நேரத்தில் அகோரமான
கோலத்தில்தான் அவர்கள் விழுந்து கிடப்பார்கள்.
மானத்தை மறைக்கக் கூட தோணாது அந்த
நேரத்தில். இப்படிப்பட்டவர்களுக்காக போஸ்டர் அடித்து கோரிக்கை
வைத்துள்ளது மது குடிப்போர் விழிப்புணர்வுச்
சங்கம்.
பி.எஸ்.சி. படித்த
பி.சி பாண்டியன்!
சங்கத்தின்
மாநிலத் தலைவரான பி.செல்லப்பாண்டியன்
(பிஎஸ்சி படித்தவராம்) என்பவர்தான் இந்த போஸ்டரை ஒட்டி
குடிமக்களின் கண்களைத் திறக்க முயற்சித்துள்ளவர்.
குடிப்போருக்கு
புனரமைப்பு.. குடிக்காதோருக்கு பாதுகாப்பு
அந்த போஸ்டரில் இடம் பெற்ற "திருவாசகம்"...
குடிப்போருக்குப் புனரமைப்பு.. குடிக்காதோருக்கு பாதுகாப்பு.
மது குடித்தாலும் மானத்தோடு வாழ்ந்திட
மது குடித்தாலும் மானத்தோடு வாழ்ந்திட, டவுசர் மாடல் ஜட்டிகளையே
அணிவீர் என்று அந்த போஸ்டரில்
கேட்டுக் கொண்டுள்ளார் செல்லப் பாண்டியன்.
இமெயில்
ஐடி - பேஸ்புக் ஐடி
போஸ்டரின்
கீழ் தனது பெயர், இமெயில்
ஐடி, பேஸ்புக் ஐடி மற்றும் செல்போன்
எண்களையும் அவர் கொடுத்துள்ளார்.
ஜட்டி படத்துடன்
டவுசர்
மாடல் ஜட்டி எப்படி இருக்கும்
என்று தெரியாமல் குடிகாரர்கள் குழம்பி விடக் கூடாது
என்பதற்காக இரண்டு டவுசர் மாடல்
ஜட்டிகளையும் படத்தில் போட்டுள்ளார் செல்லப் பாண்டியன்.
கொய்யா
டிப்ஸ்!
கூடுதலாக
ஒரு டிப்ஸையும் அவர் போஸ்டரில் தட்டி
விட்டுள்ளார். அதாவது, மதுவிலிருந்து மீண்டிட
தினந்தோறும் கொய்யாப் பழம் சாப்பிடுங்கள் என்பதுதான்
அது.
'சூப்பர்'
போஸ்டர்.. 'சுப்ரீம்' அட்வைஸ்..
No comments:
Post a Comment