ஜனவரி
1 ஆம் தேதி முதல் சமையல்
எரிவாயு மானியம், வாடிக்கையாளர்கள் வங்கி கணக்கில் செலுத்தப்படும்
என மத்திய பெட்ரோலிய துறை
அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவி்த்துள்ளார்.
சமையல்
எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு வாடிக்கையாளர்களுக்கு தற்போது ரூ.426 மானியமாக
வழங்கப்படுகிறது. ஆனால் இந்த மானியத்தை
நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு வழங்காமல் அவர்களது வங்கி கணக்கில் செலுத்தும்
திட்டம் கொண்டுவரப்படுகிறது.
ஜனவரி
-1 முதல் வங்கி கணக்கில் மானியம்:
பாட்னாவில்
அமைச்சர் தர்மேந்திர பிரதான் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:முதல்கட்டமாக
நாடு முழுவதும் உள்ள 54 மாவட்டங்களில் இந்த
திட்டம் வருகிற 15-ந் தேதி தொடங்கப்படுகிறது.
அடுத்த ஆண்டு ஜனவரி 1-ந்
தேதியில் இருந்து நாடு முழுவதும்
இந்த திட்டம் அமல்படுத்தப்படும்.
இந்தியாவில்
தற்போது சமையல் கியாஸ் சிலிண்டர்களை,
சந்தை மதிப்பில் இருந்து மானியத்தை கழித்த
பின்னர் வருகிற தொகைக்கு தான்
வாடிக்கையாளர்கள் வாங்கி வருகிறார்கள். ஆனால்
இனி சந்தை விலைக்கே சமையல்
கியாஸ் சிலிண்டரை வாடிக்கையாளர்கள் வாங்க வேண்டும். இந்த
மானியத் தொகையை பின்னர் வாடிக்கையாளர்களின்
வங்கி கணக்கில் மத்திய அரசு செலுத்தும்
என தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
No comments:
Post a Comment