விஜய்க்கு
சூப்பர் ஸ்டார், இளைய தளபதி
ஆகியவற்றில் எந்த பட்டம் பிடித்துள்ளது
என்று தெரியுமா?
இளைய தளபதியாக வலம் வரும் விஜய்க்கு
சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுக்க
அவரது ரசிகர்கள் மதுரையில் பிரமாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தனர்.
எங்கள்
தலைவர் இருக்கையில் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் பட்டத்தை
அளிப்பதா என்று ரஜினி ரசிகர்கள்
கோபத்தில் கொந்தளித்தனர். இந்த பட்டம் பற்றி
ரஜினி கண்டுகொள்ளவில்லை.
விஜய்யோ
தனக்கு சூப்பர் ஸ்டார் பட்டமளிக்கும்
விழாவுக்கு வருவமாறு கோலிவுட் பிரபலங்களுக்கு போன் செய்து அழைப்பு
விடுத்தார். அப்படி என்றால் விஜய்
தான் அடுத்த சூப்பர் ஸ்டாரா
என்று வியக்கையில் பட்டமளிக்கும் நிகழ்ச்சி மறுதேதி குறிப்பிடாமல் தள்ளி
வைக்கப்பட்டது.
அது பற்றி இதுவரை எந்த
தகவலும் இல்லை. இந்நிலையில் இன்று
காலை விஜய்யின் ட்விட்டர் கணக்கு பக்கம் சென்றபோது
அவரிடம் அவரது ரசிகர்கள் கேட்ட
இந்த கேள்வியும், அதற்கு அவர் அளித்த
பதிலும் கவனத்தை ஈர்த்தது.
சரி சூப்பர் ஸ்டார்
பட்டத்தை விட அவர் மதிக்கும்
விஷயத்தை மக்களுக்கு நினைவுபடுத்தலாமே என்று தான் இந்த
செய்தி.
கேள்வி:
சூப்பர் ஸ்டார், இளைய தளபதி
ஆகியவற்றில் விஜய்க்கு எந்த பட்டம் பிடித்துள்ளது?
பதில்:
மக்களின் அன்புக்கு முன்னால் இந்த பட்டம் எல்லாம்
பெரியது இல்லை.
அப்படி
என்றால் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் பட்டம்
பெறுவதில் விருப்பம் இல்லையோ?...
No comments:
Post a Comment