வசந்த பாலன் இயக்கத்தில் வரும்
28-ம் தேதி வெளியாகவுள்ள காவியத்
தலைவன் படத்துக்கு தமிழக அரசு வரிவிலக்கு
அளித்துள்ளது.
முன்பெல்லாம்
படத்தின் தலைப்பு தமிழில் இருந்தாலே
போதும், வரி விலக்கு நிச்சயம்
என்ற நிலை இருந்தது. அதிமுக
அரசு பதவிக்கு வந்த பிறகு அந்த
நிலை மாறியது.
தமிழில்
தலைப்பு, ஆபாசமில்லாத காட்சி அமைப்பு, அனைவரும்
பார்க்கத்தக்க வகையில் யு சான்று
என்று பல அம்சங்கள் சிறப்பாக
அமைந்தால் மட்டுமே வரிவிலக்கு என்ற
கட்டுப்பாடுகள் வந்தன.
இந்தக்
கட்டுப்பாடுகள் இன்னொரு பக்கம் அரசியல்
ரீதியான நெருக்கடிகளுக்குப் பயன்பட்டதாக உதயநிதி ஸ்டாலின் போன்றவர்கள்
விமர்சித்தாலும், மக்களுக்குச் சேர வேண்டிய வரிச்சலுகை
குப்பைப் படங்களை எடுத்தவர்களுக்கும் போகாமல்
தடுக்க ஓரளவு உதவி வருகிறது.
படங்களுக்கு
வரிச் சலுகை பெறுவது அத்தனை
சாதாரண விஷயமல்ல என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தச் சூழலில் வசந்த பாலன்
இயக்கத்தில், சித்தார்த், ப்ருத்விராஜ், வேதிகா நடிப்பில் வரும்
வெள்ளிக்கிழமை வரவிருக்கும் காவியத் தலைவன் படத்துக்கு
முழுமையாக கேளிக்கை வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment