அசுத்தம் செய்ய யாராவது ஒதுங்கினால், உடனடியாக விசில் அடித்து ஒலி எழுப்பி எச்சரிக்கும் புதிய முயற்சி மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காக மாணவர்களுக்கு விசில் வழங்கும் சிறப்பு முகாம் விரைவில் நடைபெற உள்ளது.
இது குறித்து இந்தூர்
மண்டல வருவாய் ஆணையர் சஞ்சய்
துபே கூறியதாவது: சுத்தம், தூய்மை குறித்து மாணவர்களுக்கு
விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. சாலைகளில் அசுத்தம் செய்வதால் ஏற்படும் சுகாதாரக் கேடு குறித்தும் அவர்களுக்கு
விளக்கப்படுகிறது.
நாடு முழுவதும் அனைத்து வீடுகளிலும் கழிப்பிடங்கள்
இருக்க வேண்டும் என்று மத்திய அரசு
கூறியுள்ளது. கழிப்பிடங்கள் இருந்தாலும், கிராமப் பகுதியில், ஏன்
நகர்பகுதியிலும் பலர் சாலை ஓரங்களில்
சிறுநீர் கழிப்பது போன்ற சுகாதாரக் கேட்டை
செய்கின்றனர்.
இது குறித்து விழிப்புணர்வு மேற்கொள்ளும் அதே நேரத்தில், புதிய
திட்டத்தையும் இந்தூர் மண்டலத்தில் செய்ய
உள்ளோம். முதலில் 5, 6ம் வகுப்பு மாணவர்களுக்கு
அரசு சார்பில் விசில் கொடுக்கப்படும்.
சாலையில்
யாராவது அசுத்தம் செய்வதைப் பார்த்தால், அவர்களுக்கு அருகே சென்று விசில்
அடிக்கும்படி கூறி உள்ளோம். இதன்
மூலம் அசுத்தம் செய்யும் நபர் இனி அந்தத்
தவறை செய்ய மாட்டார் என்று
நம்புகிறோம். இதைத் தவிர சுகாதார
தூதர்களையும் தேர்வு செய்ய உள்ளோம்.
பல்வேறு தரப்பில் உள்ளவர்களை
இவ்வாறு தூதர்களாக தேர்ந்தெடுத்து அவர்கள் மூலம் விழிப்புணர்வு
ஏற்படுத்த உள்ளோம். தற்போது கிராமங்களில் எந்தெந்த
வீடுகளில் தனியாக கழிப்பிடம் அமைத்து
பயன்படுத்துகிறார்கள் என்ற ஆய்வை மேற்கொள்கிறோம்.
அவ்வாறு கழிப்பிடம் உள்ள வீடுகளின் முகப்பில்
பச்சை வண்ணத்தால் அடையாளம் இடப்படும். மண்டலத்தில் உள்ள அனைத்து பள்ளிகள்,
அங்கன்வாடி மையங்களில் கழிப்பிடங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இவ்வாறு துபே தெரிவித்தார்.
No comments:
Post a Comment