மெட்ராஸ்
படத்தின் வெற்றியைத்தொடர்ந்து கார்த்தி கொம்பனாக களம் இறங்கி விட்டார்.
ராமநாதபுரம் பகுதியில் ஆடு வியாராம் செய்யும்
இளைஞனாக மாறியுள்ள அவர் அடிக்கடி ராஜ்கிரணை
வம்புக்கு இழுக்கிறாராம். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக லட்சுமி மேனன்
நடிக்கிறார். அம்மாவாக கோவை சரளா நடிக்கிறார்.
குட்டிப்புலி படத்தை இயக்கிய முத்தையா
கொம்பன் படத்தை இயக்குகிறார்.
இந்த படத்தின் கதை அப்பா இல்லாமல்
வரும் பையன், அம்மா இல்லாமல்
வளரும் பெண் இருவரும் திருமணம்
செய்து கொள்கின்றனர். இதில் லட்சுமி மேனனின்
அப்பாவாக நடிக்கும் ராஜ்கிரணை அடிக்கடி வம்புக்கு இழுக்கிறாராம். மேலும் தனது மனைவியாக
நடிக்கும் லட்சுமிமேனனிடம் ராஜ்கிரணை பற்றி நக்கலாக அடிக்கடி
கமெண்ட் அடிக்கிறாராம் கார்த்தி. அந்த சமயத்தில் உள்ளே
வரும் ராஜ்கிரண்க்கு எப்படி இருக்கும் என்பதை
சொல்லி தெரிய வேண்டியதில்லை.
இதேபோல்
கோவைசரளாவையும் லட்சுமிமேனன் பேசுகிறாராம். இவர்கள் இருவரும் அடிக்கடி
இருபிறந்த வீட்டினரை அடிக்கடி திட்டுவதை நகைச்சுவையாக படமாக்குகிறார் இயக்குனர் முத்தையா. படம் வேகமாக வளர்ந்து
வருகிறது. பருத்தி வீரனுக்கு பிறகு
கார்த்தி நடிக்கும் கிராமத்து படம் கொம்பன் என்பது
குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment