சென்னையில்
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.58-ம், டீசல் விலை
லிட்டருக்கு ரூ.2.43-ம் குறைந்தது.
இந்த விலை குறைப்பு நள்ளிரவு
முதல் அமலுக்கு வந்தது.
பெட்ரோல்
விலை குறைந்தது
சர்வதேச
சந்தையில் கச்சா எண்ணெய் விலை
கணிசமாக குறைந்தது. இதையொட்டி இந்தியாவிலும் எண்ணெய் நிறுவனங்கள் நேற்று
பெட்ரோல் மற்றும் டீசல் விலையை
குறைத்தன. டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.41-ம், டீசல் விலை
லிட்டருக்கு ரூ.2.25-ம் குறைக்கப்பட்டது.
சென்னையில்
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.58
குறைந்து ஒரு லிட்டர் ரூ.67.01
ஆனது. டீசல் விலை லிட்டருக்கு
ரூ.2.43 குறைந்து லிட்டர் ரூ.56.84 ஆனது.
நேற்று நள்ளிரவு முதல் இந்த விலை
குறைப்பு அமலுக்கு வந்தது.
மும்பையில்
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.49
குறைந்து ஒரு லிட்டர் ரூ.71.91
ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு
ரூ.2.50 குறைந்து லிட்டர் ரூ.61.04 ஆனது.
6-வது முறையாக குறைப்பு
இந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில்
இருந்து பெட்ரோல் விலை 6-வது முறையாக
குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேசமயம்
டீசல் விலை கடந்த மாதம்
19-ந் தேதி 5 ஆண்டுகளுக்கு பின்னர்
ரூ.3.37 குறைக்கப்பட்டது. அன்றைய தினமே டீசல்
விலை நிர்ணய கொள்கையும் மாற்றி
அமைக்கப்பட்டது. பெட்ரோல் விலையை போலவே, டீசல்
விலையையும் சர்வதேச சந்தை விலைக்கு
ஏற்ப எண்ணெய் நிறுவனங்களே மாற்றி
அமைத்துக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.
இப்போது
2-வது முறையாக டீசல் விலை
குறைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment