டாஸ்மாக்
மதுபானங்கள் விலை இன்று முதல்
கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. விலை உயர்வால் குடிமகன்கள்
கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் உள்ள 11 மதுபான நிறுவனங்களிடமிருந்து
மதுபானங்களை டாஸ்மாக் நிர்வாகம் கொள்முதல் செய்கிறது. கடந்த 2009ம் ஆண்டு கொள்முதல்
விலையை டாஸ்மாக் நிர்வாகம் உயர்த்தியது.
அதன்பிறகு கொள்முதல் விலை உயர்த்தப்பட வில்லை.
கடந்த ஆகஸ்ட் 20ம் தேதி டாஸ்மாக்
மதுபானங்களின் விலையை ரூ.10 முதல்
ரூ.40 வரை தமிழக அரசு
உயர்த்தியது. இந்நிலையில், மீண்டும் டாஸ்மாக் மது விலையை உயர்த்த
அரசு திட்டமிட்டது.
அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மது உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படும் ஸ்பிரிட்,
மதுபாட்டில்கள், அட்டை பெட்டிகள் என
எல்லா மூலப்பொருட்களின் விலையும் 2009க்கு பிறகு இரு
மடங்கு உயர்ந்துவிட்டன. மதுபாட்டில்களை நிரப்பும் பணியில் ஈடுபடும் தொழி
லாளர் களின் ஊதியமும் 2 மடங்கு
உயர்ந்துள்ளது. இதனால், மதுபான கொள்முதல்
விலையை உயர்த்தவேண்டும் என்று மது உற்பத்தியாளர்கள்
2 ஆண்டுகளாக தமிழக அரசிடம் கோரி
வந்தனர்.
கொள்முதல்
விலை உயர்வு தொடர்பாக டாஸ்மாக்
அதிகாரிகள், மதுபான நிறுவனங்களின் உரிமையாளர்கள்
மற்றும் அரசு தரப்பு பேச்சுவார்த்தை
இரு மாதங்களுக்கு முன்பே நடந்து முடிந்தது.
கொள்முதல் விலை ஏற்றத்துக்கான அறிவிப்பு
முதல்வர் அலுவலகம் வெளியிட இருந்த சூழலில்,
சொத்து குவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதா சிறை சென்றார்.
இதனால்,
மதுபான கொள்முதல் விலை உயர்வு பிரச்னை
கிடப்பில் போடப்பட்டது. மதுபான கொள்முதல் விலை
உயர்த்தப்படுவது தொடர்பாக தயாரிப்பு நிறுவனங்கள் அரசிடம் மீண்டும் கோரிக்கை
வைத்தன. இதையடுத்து, மதுபானங்களின் உயர்வுக்கு முதல்வர் அலுவலகம் ஒப்புதல் அளித்துள்ளதாக டாஸ் மாக் வட்டார
தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, தற்போது மீண்டும் மதுபான
விலை உயர்வை தமிழக அரசு
அறிவித்துள்ளது. புதிய விலை உயர்வு
குறித்த பட்டியலும் வெளியாகியுள்ளது.
குறைந்த
விலை மதுபானங்களான ரூ.75, ரூ.80க்கு
விற்கப்படும் மதுபானங்களின் விற்பனை விலை ரூ.8
உயர்த்தப்பட்டுள்ளது. ரூ.100க்கு அதிகமாக
விற்கும் மதுபானங்கள் விலை ரூ.10 வரை
உயர்ந்துள்ளது.
குவாட்டருக்கு ரூ.10, ஆஃப் பாட்டில்களுக்கு
ரூ.20, ஃபுல்லுக்கு ரூ.60 வரை விலை
உயர்த்தப்பட்டுள்ளது. பிரீமியம் ரக பாட்டில்களுக்கு குவாட்டருக்கு
ரூ.20, ஆஃப் பாட்டில்களுக்கு ரூ.40,
ஃபுல்லுக்கு ரூ.80ம், பீர்
வகைகளுக்கு ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளன.
கொள்முதல்
விலை 24 பாட்டில்கள் கொண்ட பெட்டிகளுக்கு ரூ.110
வரையும், பீர் பாட்டில்களுக்கு ரூ.60
வரையும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு
இன்று முதல் அமலுக்கு வருவதாக
டாஸ்மாக் நிர்வாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment