Monday, November 10, 2014

மீண்டும் ரஜினியுடன் இணைந்து நடிக்க வாய்ப்புள்ளது...: கமல் நம்பிக்கை

மீண்டும் ரஜினியுடன் இணைந்து நடிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார் நடிகர் கமல். 1970 மற்றும் 80-களில் ரஜினியும் கமலும் நிறைய படங்களில் இணைந்து நடித்தனர்.

 இவர்கள் சேர்ந்து நடித்த அபூர்வராகங்கள், மூன்று முடிச்சு, இளமை ஊஞ்சலாடுகிறது, நினைத்தாலே இனிக்கும், 16 வயதினிலே, அலாவுதீனும் அற்புத விளக்கும் உள்ளிட்ட படங்கள் வெற்றிகரமாக ஓடின. ஆனால், அதன்பிறகு இருவரும் தனித்தனியாக பிரிந்து கதாநாயகர்களாக நடித்து தற்போது மிகவும் உயர்ந்த நிலையில் உள்ளனர்.

சமீபகாலமாக, மீண்டும் இருவரும் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து அவர்கள் முன்வைக்கப் பட்டு வருகிறது. இந்நிலையில், இது தொடர்பாக பேட்டி ஒன்றில் கமல் மனம் திறந்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது :-

சுவாரஸ்யமான விஷயம்...

ரஜினியும் நானும் சேர்ந்து நடித்தால் அந்த படத்தை ரஜினி டைரக்டு செய்ய மாட்டார். நானோ அல்லது வேறு டைரக்டரோ இயக்குவோம். நாங்கள் இணைந்து நடித்தால் அது சுவரஸ்யமான விஷயமாக இருக்கும்.

பைக் பயணம்...

நான் நடித்த தெனாலி படத்தின் வெள்ளிவிழா நடந்த போது ரஜினி என்னுடன் மோட்டார்பைக்'கில் பயணித்த ஒரு சம்பவத்தை நினைவுபடுத்தினார்.
கமலின் உத்தரவாதம்...

அவர் பேசும் போது ‘‘கமல் என்னை வைத்து பைக் ஓட்ட துவங்கியதும் நன்றாக ஓட்டவருமா'' என்று கேட்டேன். அப்போது கமல் அப்படியே கீழே விழுந்தாலும் நான்தான் விழுவேன். உங்களை கீழே விழ விடமாட்டேன் என்றார்.

சமாதானம்...

எங்கள் சினிமா வாழ்க்கையிலும் அப்படித்தான் நடந்தது. அவர் என்னை கீழே விழவிடவில்லை. 1983-ல் சினிமாவை விட்டு வெளியேற முயன்ற போது கமல் எனக்கு சமாதானம் சொன்னார் என்று அந்த விழாவில் ரஜினி குறிப்பிட்டார்.

பேச்சுவார்த்தை...

எனவே நானும் ரஜினியும் சேர்ந்து நடிப்பதற்கான சூழ்நிலை உள்ளது. இதுகுறித்து கடந்த 5 வருடமாக பேச்சு வார்த்தை நடக்கிறது.

எதிர்பார்ப்பு...

அந்த படத்துக்கான எதிர்பார்ப்புகளை நினைத்து தான் பயமாக இருக்கிறது' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.






No comments:

Post a Comment