70 தொகுதிகளை
கொண்ட டெல்லி சட்ட சபைக்கு
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்
தேர்தல் நடந்தது. எந்த கட்சிக்கு பெரும்பான்மை
கிடைக்க வில்லை.
பா.ஜனதா அதிகபட்சமாக 31 இடங்களை
கைப்பற்றியது. 28 தொகுதிகளில் வெற்றி பெற்ற ஆம்
ஆத்மி கட்சி, காங்கிரஸ் (8 இடம்)
ஆதர வுடன் ஆட்சி அமைத்தது.
கெஜ்ரிவால் முதல்-மந்திரி ஆனார்.காங்கிரசுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால்
49 நாட் களுக்கு பிறகு கெஜ்ரிவால்
கடந்த பிப்ரவரி 14-ந் தேதி பதவியை
ராஜினாமா செய் தார்.
இதை தொடர்ந்து பிப்ரவரி 17-ந் தேதி டெல்லியில்
ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டு சட்டசபை
முடக்கி வைக்கப் பட்டது.
ஜனாதிபதி
ஆட்சி அமலில் உள்ள டெல்லி
மாநில சட்டசபையை கலைக்க கோரி ஆம்
ஆத்மி தலைவரும், டெல்லி முன்னாள் முதல்–மந்திரியுமான கெஜ்ரிவால் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு நேற்று முன்தினம்
சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான
5 நீதிபதிகள் கொண்ட அமர்வின் முன்பாக
விசாரணைக்கு வந்தது. அப்போது, டெல்லி
சட்டசபை குறித்து மாநில துணை நிலை
கவர்னர் விரைந்து முடிவு செய்யவேண்டும் என்று
நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
டெல்லியில்
புதிய ஆட்சி அமைக்க ஜனாதிபதி
ஒப்புதல் அளித்து இருப்ப தாக
மத்திய அரசு இந்த வழக்கின்
போது தெரிவித்தது. இது பற்றி டெல்லி
துணை நிலை கவர்னர் விரைவில்
முடிவு செய்ய வேண்டும் என்று
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.டெல்லியில் புதிய ஆட்சி அமைவதற்கான
சாத்தியக்கூறுகள் பற்றி இன்று ஆலோசனை
செய்வதற்காக பா.ஜனதா, காங்கிரஸ்,
ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளுக்கு
கவர்னர் நஜீப் ஜங் அழைப்பு
விடுத்தார்.
பா.ஜனதா தலைவர் சதீத்
உபத்யாய், ஜெகதீஷ் முக்தர் ஆகியோர்
கவர்னர் நஜீப் ஜங்கை சந்தித்தனர்.
டெல்லியில் பா.ஜனதா ஆட்சி
அமைக்க விருப்பமில்லை என்று அவர்கள் கவர்னரிடம்
தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
தேர்தலை சந்திக்க விரும்புவதாகவும் பா.ஜனதா கூறியதாக
அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இன்று மாலை கவர்னர் காங்கிரஸ்,
ஆம் ஆத்மி கட்சிகளை சந்திப்பார்.
இந்த கட்சிகளும் இதே கருத்தை வலியுறுத்தும்.
அதன்படி இன்று இரவே கவர்னர்
டெல்லி சட்டசபையை கலைத்து அறிவிப்பு வெளி
யிடுவார் என்று கூறப்படு கிறது.
‘டெல்லியில்
ஆட்சி அமைப்பது தொடர்பாக மாநில துணை நிலை
கவர்னர் நஜீப் ஜூங்கின் அறிக்கைக்காக
காத்திருக்கிறோம். ஆட்சி அமைக்க யாரும்
முன்வராவிட்டால் அங்கு தேர்தல் நடத்துவதை
தவிர வேறு வழி எதுவும்
இல்லை. எனவே கவர்னரின் அறிக்கை
கிடைத்ததும், மத்திய அரசு இது
பற்றி உடனடியாக முடிவு எடுக்கும் என
மத்திய அரசு அதிகாரி ஒருவர்
தெரிவித்து இருந்தார்.
No comments:
Post a Comment