ஐ படம்
தயாராகிவிட்டது. ஆனாலும் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிக்காமல் காலத்தை கடத்துகிறார்
என்ற குற்றச்சாட்டு தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரனை நோக்கி வைக்கப்பட்டது. தன்னை
நோக்கி வைக்கப்பட்ட அந்த குற்றச்சாட்டை ரஹ்மானுக்கு திருப்பி விட்டுள்ளார்.
ஐ தாமதமாவதற்கு
ரஹ்மானே காரணம் என அதிர வைத்துள்ளார் ரவிச்சந்திரன்.
ஐ -இன்
பின்னணி இசை சேர்ப்பு இன்னும் முடியவில்லை. ஐந்து ரீல்களுக்குதான் இதுவரை ரஹ்மான் பின்னணி
இசை அமைத்துள்ளார். இன்னும் ஆறு ரீல்களுக்கான பணி பாக்கி உள்ளது. இந்தத் தகவலை ரவிச்சந்திரன்
வெளியிட்டுள்ளார். ரஹ்மானை அப்படி எளிதாக குற்றப்படுத்திவிட முடியாதில்லையா.
பின்னணி
இசை மிகச்சிறப்பாக வரவேண்டும் என்பதற்காகவே ரஹ்மான் அதிக நேரத்தை எடுத்து செதுக்கிக்
கொண்டிருக்கிறார் என ஒரு பிட்டையும் போட்டிருக்கிறார்.
No comments:
Post a Comment