அ.தி.மு.க.,
தி.மு.க.,- பா.ம.க., உள்ளிட்ட
கட்சிகள் ஊழல் விவகாரத்தில் சிக்கியுள்ளதை
மனதில் வைத்தே, பா.ஜ.,
கூட்டணியில், முதல்வர் வேட்பாளர் கனவில் விஜயகாந்த் மிதப்பதாக
கூறப்படுகிறது.
கடந்த லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க.,-
தி.மு.க.,விற்கு
மாற்றாக, பா.ஜ., புதிய
கூட்டணியை உருவாக்கியது. இதில், தே.மு.தி.க.,- பா.ம.க., ம.தி.மு.க.,
உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றன.கூட்டணியில்
இடம் பெற்றிருந்த, ஒவ்வொரு கட்சியும் முரண்பாடான
கொள்கைகள் கொண்டவையாக இருந்தன. இருப்பினும், பா.ஜ.,வின்
தீவிர முயற்சியால், இக்கூட்டணி உருவானது.
அ.தி.மு.க.,
தி.மு.க.,வின்
பலத்தையும் மீறி, தர்மபுரி, கன்னியாகுமரி
தொகுதிகளில் இக்கூட்டணிக்கு வெற்றி கிடைத்தது. ஆனால்,
தேர்தலுக்கு பிறகு, கூட்டணியில் விரிசல்
உருவானது. பா.ம.க.,-
ம.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள்,
கூட்டணியில் இருந்து சப்தமின்றி கழன்று
கொண்டுள்ளன.தி.மு.க.,
தலைமையிலான, கூட்டணியில் இணைந்து, சட்டசபை தேர்தலை சந்திக்க,
அக்கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன.
ஆனால்,
தே.மு.தி.க.,
மட்டும், பா.ஜ., கூட்டணியில்
தொடர்ந்து வருகிறது.பா.ஜ., நிர்வாகிகள்,
தே.மு.தி.க.,வை பெரிதாக கண்டு
கொள்ளாத நிலையிலும், மத்திய அரசின் நடவடிக்கைகளை
அவ்வப்போது, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்
புகழ்ந்து அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார்.
இதுமட்டுமின்றி, 'சட்டசபை தேர்தலில், பா.ஜ., கூட்டணியில் முதல்வர்
வேட்பாளர் நான் தான்' எனவும்,
விஜயகாந்த் கூறத் துவங்கியுள்ளார்.இது
தொடர்பாக, பல்வேறு விவாதங்களும் அரங்கேறி
வருகின்றன.
இதுகுறித்து,
தே.மு.தி.க.,
தரப்பில் கூறப்படுவதாவது:அ.தி.மு.க., பொதுச் செயலர்
ஜெயலலிதா, தி.மு.க.,
முக்கியப் புள்ளிகள், பா.ம.க.,
இளைஞரணி தலைவர் அன்புமணி ஆகியோர்
மீது, ஊழல் குற்றச்சாட்டு உள்ளது.
இதில், ஜெயலலிதா குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, சிறை
தண்டனை பெற்றிருக்கிறார்.மற்றவர்கள் மீது, மூன்று மாதங்களில்,
குற்றம் நிரூபிக்கப்படும் என விஜயகாந்த் நினைக்கிறார்.
அவ்வாறு நடந்தால், அடுத்த
ஐந்தாண்டு கால, ஆட்சி அதிகாரத்தை
கைப்பற்ற நினைக்கும் அ.தி.மு.க.,- தி.மு.க., பா.ம.க., ஆகிய கட்சிகளுக்கு
நெருக்கடி ஏற்படும்; மக்கள் மத்தியில், அக்கட்சிகளின்
செல்வாக்கு சரியும்.இந்த கட்சிகளுக்கு
மாற்றாக, மக்கள் தே.மு.தி.க.,வை
விரும்புவர். அதனால், முதல்வர் வேட்பாளர்
வாய்ப்பு விஜயகாந்திற்கு கிடைக்கும்.இதை தவிர்த்து பார்த்தால்,
பா.ஜ., மாநில தலைவர்
தமிழிசையை, முதல்வர் வேட்பாளராக அறிவிக்க முடியும்.
ஆனால், அவருக்கு மக்கள்
மத்தியில் ஈர்ப்பு இல்லை. அதனால்,
பா.ஜ., அதை தவிர்த்து
விடுவர்.இதை மனதில் வைத்தே,
விஜயகாந்த் கணக்கு போடுகிறார். அதனால்தான்,
பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் வேட்பாளராக
தன்னை அறிவிப்பார் என, விஜயகாந்த் ஆணித்தரமாக
நம்புகிறார்.அந்த நம்பிக்கையை தான்,
கட்சியினர் மத்தியில் அவர் வெளிப்படுத்தி வருகிறார்.இவ்வாறு, தே.மு.தி.க., வட்டாரத்தில் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment