கோச்சடையான் படம்
வெளிவருவதற்கு முன்பாக சமூக வலைத்தளமான ட்விட்டரில் புதிய கணக்கை ஆரம்பித்து ஒரு நாளுக்குள்ளாகவே
ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொடர்பாளர்களைப் பெற்றவர் ரஜினிகாந்த்.
அதன் பின் கோச்சடையான்
படம் பற்றிய ஓரிரு கருத்துகளை மட்டுமே பதிவு செய்தார். அவற்றிலும் படத்தை இயக்கிய மகள்
சௌந்தர்யாவிற்கும், படக்குழுவினருக்கும் வாழ்த்து தெரிவிக்க மட்டுமே பயன்படுத்தினார்.
அவர் கடைசியாக டிவிட்டரில் கருத்து பதிவு செய்தது மே 23ம் தேதி. கடந்த ஐந்து மாதங்களாக
வேறு எந்த பதிவையும் அவர் போடவேயில்லை.
ரஜினிகாந்தின்
ரசிகர்கள் அதன் பின் லிங்கா படம் ஆரம்பிக்கப்பட்ட போது அவர்களின் அபிமான நடிகர் ஏதாவது
ஒரு பதிவைப் போடுவார் என்று எதிர்பார்த்தார்கள். அது நேற்று லிங்கா படத்தின் டீசர்
வெளியானது வரை நடக்கவேயில்லை.
நேற்றாவது லிங்கா
பட டீசர் பற்றியோ, அல்லது ரசிகர்களுக்காகவாவது எதையாவது போட்டிருப்பார் என்று எதிர்பார்த்தால்
இன்று காலை வரை லிங்கா படம் பற்றிய பதிவாக ஒரு வார்த்தைக் கூட இல்லாதது ரசிகர்களை மிகவும்
ஏமாற்றமடைய வைத்திருக்கிறது.
ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில்
ரசிகர்கள் மட்டுமல்லாது, மற்ற நட்சத்திரங்களும் லிங்கா டீசர் பற்றி எதையாவது ஒன்றை
பதிவிட்டுக் கொண்டிருக்க, ரஜினிகாந்தின் அமைதி அனைவருக்கும் ஆச்சரியமளிப்பதாகவே உள்ளது.
No comments:
Post a Comment