எந்திரன்,
சிவாஜி படத்துக்கு ஆடை வடிவமைத்த பாலிவுட்
டிசைனர் மனிஷ் மல்ஹோத்ரா புதிய
படத்தில் விஜய்க்கு காஸ்டியூம் டிசைன் அமைக்கிறார். கத்தி
படத்தையடுத்து விஜய் நடிக்கும் புதிய
படத்துக்கு விஜய் 58 என தற்காலிகமாக பெயர்
வைக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தை சிம்புதேவன் டைரக்டு செய்கிறார். ராணி
வேடத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு
தமிழ் படத்தில் நடிக்கிறார் ஸ்ரீதேவி. அவரது மகளாக இளவரசி
வேடத்தில் ஹன்சிகா நடிக்கிறார். மற்றொரு
ஹிரோயின் ஸ்ருதி ஹாசன். தேவி
ஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார்.
இப்படத்தின்
படப்பிடிப்பு சென்னையில் ஈசிஆர் சாலையையொட்டியுள்ள பகுதியில்
தொடங்கியது. இதற்காக பிரமாண்ட அரங்கு
அமைக்கப்பட்டிருக்கிறது. விஜய், ஹன்சிகா நடிக்கும்
பாடல் காட்சி படமாகி வருகிறது.
இப்படத்தில் விஜய்க்கு காஸ்டியூம் வடிவமைக்க மனிஷ் மல்ஹோத்ரா ஒப்பந்தம்
செய்யப்பட்டிருக்கிறார். இவர் எந்திரன், சிவாஜி
படத்தில் ரஜினிக்கு காஸ்டியூம் டிசைன் வடிவமைத்தவர். ஷாருக்கானின்
பேவரைட் டிசைனரும் இவர்தான். ஹாலிவுட்டில் உருவான லார்ட் ஆப்
தி ரிங்க்ஸ் பாணியில் இப்படம் உருவாகிறது.
No comments:
Post a Comment