Wednesday, November 5, 2014

அதர்வா சொல்லும் ‘கணிதன்’ ரகசியங்கள்!

’இரும்புகுதிரை படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாததால்,  அதர்வா அடுத்து தான் நடித்து வரும் ‘ ஈட்டி மற்றும் ‘கணிதன் உள்ளிட்ட படங்களில் சற்று அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.

இதில் ’கணிதன் படத்தை இயக்கும் சந்தோஷ் படத்தைக் கொண்டு செல்லும்விதம் வித்தியாசமாக உள்ளதாம். எனவே காட்சிகளை முந்தைய நாளே கேட்டுத் தெரிந்து கொண்டு முழுவதுமாக காட்சியை உள் வாங்கிக்கோண்டு நடித்து வருகிறாராம் அதர்வா.

இப்படத்தில் பிரம்மாண்டமான ஆக்ஷ்ன் காட்சிகளும் மேலும் இதற்கு முன்பு தான் நடித்த படங்களில் இதுவரை எடுக்காத ரிஸ்க்கை இந்தப் படத்தில் எடுத்திருக்கிறாராம்.

முக்கியமாக, எந்த சண்டை காட்சியிலும் டூப் போடாமல் தானே நடிப்பதாகக் கூறும் அதர்வா ஆக்ஷன் பிரியர்களுக்கு இந்தப் படம் பெரிய விருந்தாக இருக்கும் என்கிறார்.

இப்படத்தில் ‘மெட்ராஸ் படத்தின் நாயகி கேத்ரீன் தெரசா அதர்வாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். சிவமணி இசையமைக்கும் இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார்.


No comments:

Post a Comment