சூப்பர்
ஸ்டார் ரஜினி நடிக்கும் லிங்கா
படத்தின் டீசர் நேற்று (நவ
1) வெளியானது. யூ டியூப்பில் லைக்குகளை
அள்ளிக் கொண்டிருக்கும் டீசரைப் பற்றிய ஒரு
பார்வை.ஏழுமலையான் உருவத்தோடு ராக்லைன் நிறுவன பெயருடன் ஆரம்பிக்கிறது
லிங்கா டீசர். மாவட்ட கலெக்டரான
ராஜ லிங்கேஸ்வரன் (ரஜினி) கட்டிய அணையின்
கல்வெட்டையும் அணையும் ஸ்டைலாக பார்க்கிறார்
இன்னொரு ரஜினி.
ஏ.ஆர்.ரகுமான் பெயரைத்
தொடர்ந்து ரெயில் சண்டைக் காட்சியும்
பாலத்தை தகர்க்க சிலர் கயிறு
கட்டி பாலத்தில் இறங்கும் காட்சியும் இடம்பெறுகிறது. அதன் பிறகு தயாரிப்பாளர்
ராக் லைன் வெங்கடேஷ் பெயரும்,
அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜனி
பெயரும் இடம் பெறுகிறது.
பிரம்மாண்ட
செட்டுகளில் ரஜினி அனுஷ்கா மற்றும்,
சோனாக்ஷியுடன் ஆடுவது சிவாஜி படத்தின்
செட்டுகளை நினைவுபடுத்துகிறது. மனிதன் படத்தில் தோல்
சட்டை பேண்ட் அணிந்து வருவார்
ரஜினி. அதுபோன்ற ஒரு ஷாட்டும், சிவாஜி
படத்தில் "தீ தீ... ஜெகஜோதி
ஜோதி..." பாடலில் வரும் ஒரு
துப்பாக்கி ஸ்டைலை இதிலும் நிகழ்த்துகிறார்.
கலெக்டர் ரஜினி மக்களுக்கு நடுவில்
பட்டுவேட்டி, பட்டு சட்டை அணிந்து
நடந்து வருவது, படையப்பா ஸ்டைலில்
கால்மேல் கால்போட்டு உட்கார்ந்திருப்பது, கோட்டை தூக்கி தோளில்
போட்டு வருவது என்று காட்சிகள்
இடம் பெயர்கிறது.
டீசரில்
இடம்பெற்றுள்ள காட்சிகளை வைத்து பார்க்கும்போது ஆங்கிலேயர்
ஆட்சியில் ராஜ லிங்கேஸ்வரன் கட்டிய
அணைக்கு நிகழ்காலத்தில் ஒரு ஆபத்து வருகிறது.
அதனை இன்றைய ரஜினி எப்படி
காப்பாற்றுகிறார் என்பதுதான் கதை என்பது தெளிவாகிறது.
No comments:
Post a Comment