பாஜ இளைஞர் அமைப்பை கண்டித்து,
கொச்சி கடற்கரையில் இன்று மாலை ஆயிரக்கணக்கான
இளைஞர்கள், இளம்பெண்கள் கலந்து கொள்ளும் முத்த
போராட்டம் நடைபெறுகிறது. ஜோடிகள் குவியத் தொடங்கி
உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோடு
நகரின் மையப்பகுதியில் ‘டவுண் டவுண்‘ என்ற
பெயரில் ஒரு ஓட்டல் உள்ளது.
கோழிக்கோட்டை சேர்ந்த சில இளைஞர்கள்
சேர்ந்து நடத்தும் இந்த ஓட்டலில் அந்த
பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர்கள்,
மாணவிகள் மற்றும் காதலர்கள் அதிகளவில்
வருவது வழக்கம். இவர்கள் ஓட்டலுக்குள் கட்டிப்
பிடித்தும், முத்தம் கொடுத் தும்
கும்மாளமிடுவதாக ஏராளமான புகார்கள் கூறப்பட்டன.
இந்நிலை யில் கடந்த சில
தினங்களுக்கு முன் இந்த ஓட்ட
லில் சில ஜோடிகளின் வரம்பு
மீறிய ஆடல், பாடல் காட்சிகள்,
உள்ளூர் டிவியில் ஒளிபரப்பானது.
இதையடுத்து
பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர்
அமைப்பான யுவமோர்ச்சா தொண்டர்கள் அந்த ஓட்டலை அடித்து
நொறுக்கி சூறையாடினார்கள். இந்த சம்பவம் கேரளாவில்
பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஓட்டலை சூறையாடியதற்கு அந்த
ஓட்டலுக்கு வரும் நிரந்தர வாடிக்கையாளர்களும்,
பிரபல மலையாள சினிமா டைரக்டர்
ஆஷிக் அபு உட்பட சில
சினிமா ஆர்வலர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அந்த ஓட்டலை மீண்டும் திறக்க
வேண்டும் என இவர்கள் கோரிக்கை
விடுத்தனர்.
இதையடுத்து
அந்த ஓட்டல் கடந்த சில
தினங்களுக்கு முன் மீண்டும் திறக்கப்பட்டது.
தற்போது முன்பை விட அதிக
ஆட்கள் இந்த ஓட்டலுக்கு வரத்
தொடங்கி உள்ளனர். இந்நிலையில் ஓட்டலை சூறையாடியதற்கு எதிர்ப்பு
தெரிவிக்கும் வகையில், கொச்சியில் பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடமான மரைன்
டிரைவ் பகுதியில் 2ம் தேதி (இன்று)
மாலையில் முத்தம் கொடுத்து போராட்டம்
நடத்தப் போவதாக கூறி பேஸ்புக்கில்
வேகமாக தகவல்கள் பரவியது. ‘கிஸ் ஆப் லவ்‘
என பெயரிடப்பட்ட இந்த பகிரங்க முத்த
போராட்டத்துக்கு காதலர்களும், தம்பதிகளும், நண்பர்களும் ஆதரவு தர வேண்டும்
என்று குறிப்பிடப்பட்டது. பேஸ்புக்கில் ஆயிரக்கணக்கான லைக்குகள் கிடைத்தன. முத்த போரட்டத்தை நடத்த
விடமாட்டோம் என்று விஸ்வ இந்து
பரிஷத் உட்பட பல இந்து
அமைப்புகள் அறிவித்தன.
இந்நிலையில்,
இந்த நிகழ்ச்சிக்கு தடை கோரி கேரள
ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. பாதுகாப்பு
குறித்த ஏற்பாடுகளுக்கு போலீசார் அளித்த உறுதிமொழியை தொடர்ந்து
இந்த விவகாரத்தில் ஐகோர்ட் தலையிட முடியாது
என்று மறுத்து விட்டது. இதுகுறித்து
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ராகுல் கூறுகையில், நிகழ்ச்சிக்கு
எதிர்ப்பு தெரிவித்த வழக்கை ஐகோர்ட் தள்ளுபடி
செய்துள்ளது. எனவே திட்டமிட்டபடி கொச்சியில்
இன்று மாலை முத்த திருவிழா
நடைபெறும். இதில் பெண்கள் உள்பட
1000 பேர் கலந்து கொள்கின்றனர் என்று
தெரிவித்தார். இன்று மாலை நடக்கும்
நிகழ்ச்சிக்காக ஏராளமான ஜோடிகள் திரண்டுள்ளதால்
பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment