விஜய் நடித்து தீபாவளிக்கு வெளியான
கத்தி படம் இரண்டாவது வாரத்தில்
ரூ 100 கோடி வசூலைத் தாண்டிவிட்டதாக
அவரது மேனேஜர் பிடி செல்வகுமார்
இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதன் மூலம் இதுவரை வந்த
தென்னிந்திய நடிகர்கள் அத்தனை பேரின் வசூல்
சாதனைகளையும் கத்தி முறியடித்துவிட்டதாவும் அந்த அறிக்கையில்
பிடி செல்வகுமார் குறிப்பிட்டுள்ளார்.
கத்தி படம் வெளியான
நாளிலிருந்து பல்வேறு வசூல் சாதனைகளை
நிகழ்த்தி வருவதாக படக்குழுவினர் அறிக்கை
வெளியிட்டு வருகின்றனர். நேற்று முன் தினம்
படத்தின் இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ்,
இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் இந்தப்
படம் ரூ 100 கோடி வசூலைத்
தாண்டிவிட்டதாக ட்விட்டரில் குறிப்பிட்டிருந்தனர்.
இந்த நிலையில் படத்தின் நாயகன் விஜய்யின் பிஆர்ஓ
மற்றும் மேனேஜர் பிடி செல்வகுமார்
(விஜய் நடிக்கும் அடுத்த படத்தைத் தயாரிப்பவரும்
இவரே) இன்று ஒரு அறிக்கை
விடுத்துள்ளார். அதில், "ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில்
விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான கத்தி திரைப்படம்
ஒரு வாரத்தில் ரூ 100 கோடியைத் தாண்டியது.
இதுவரை
வந்த தென்னிந்திய நடிகர்களின் வசூலை கத்தி முறியடித்துள்ளது
என விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் ரூ 65.1 கோடியும், இந்தியாவின்
மற்ற மாநிலங்களில் 15.4 கோடியும், வெளிநாடுகளில் ரூ 20.2 கோடியும் வசூல்
செய்துள்ளது," என்று குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment