திமுகவுடன்
கூட்டணி சேரும் எண்ணம் துளி
கூட இல்லை என ஈரோடு
கணேசமூர்த்தி இல்ல விழாவில் மதிமுக
பொதுச்செயலாளர் வைகோ பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
கடந்த வாரம் பாமக நிறுவனர்
ராமதாஸின் பேத்தி திருமண விழாவில்
கலந்து கொண்ட போது திமுக
பொருளாளர் ஸ்டாலினும், மதிமுக பொதுச் செயலாளர்
வைகோவும் சந்தித்துக் கொண்டனர். இதனால், இரு கட்சிகளும்
கூட்டணி வைக்கப் போவதாக தகவல்கள்
வெளியாயின.
ஆனால்,
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் எந்தக் கட்சியுடன் கூட்டணி
என்பது தேர்தல் தேதி அறிவிக்கப்
பட்ட பிறகே தெரிவிக்கப் படும்
எனவும், வைகோவுடனான சந்திப்பு அரசியல் நாகரீகத்திற்கானது என்றும்
திமுக பொருளாளர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
தி.மு.க.வுடன்
கூட்டணி கிடையாது... கூட்டணிப் பேச்சு ஊடகங்களின் யூகம்
தான்: வைகோ அறிவிப்பு
இந்நிலையில்,
இன்று காங்கேயத்தில் ம.தி.மு.க. நிர்வாகி கணேசமூர்த்தி
இல்ல திருமண விழாவில் கலந்து
கொண்டார் வைகோ.
அப்போது
அவர் பேசியதாவது, ‘தி.மு.க.வுடன் கூட்டணி என்று
ஒருபோதும் கூறியது கிடையாது. அந்த
எண்ணம் துளி கூட மதிமுகவுக்கு
இல்லை. கூட்டணி தொடர்பாக ஊடகங்களில்தான்
செய்திகள் வெளியானது. ஸ்டாலினுடனான சந்திப்பு அரசியல் நாகரீகத்திற்கானது' என
விளக்கமளித்துள்ளார்.
முன்னதாக
மு.க.ஸ்டாலின் வைகோ
சந்திப்பு குறித்து திமுக தலைவர் கருணாநிதியிடம்
செய்தியாளர்கள் கேட்டபோது கூட்டணி ஏற்பட்டால் மகிழ்ச்சி
அடைவேன். வைகோவும், நானும் பகைவர்கள் அல்ல,
சந்திப்போம் என்று கூறியிருந்தார் என்பது
நினைவிருக்கலாம்.
அதேபோல
மு.க.ஸ்டாலினிடம் கூட்டணி
ஏற்படுமா என்று செய்தியாளர்கள் கேட்டபோது,
அது உங்களுக்கு மகிழ்ச்சி அளித்தால் எனக்கும் மகிழ்ச்சிதான் என்று கூறியிருந்தார் என்பது
குறிப்பிடத்தக்கது.
ஆனால் தற்போது கூட்டணி இல்லை
என்று வைகோ கூறியிருப்பது பரபரப்பைக்
கிளப்பியுள்ளது.
No comments:
Post a Comment