புதிய இயக்கம் தொடங்கப்போவதாக ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்.
புதிய இயக்கத்தின் பெயரும் கொடியும் திருச்சி
மாநாட்டில் அறிவிக்கப்படும் என வாசன் தெரிவித்துள்ளார்.
ஜி.கே.வாசனுக்கு ஆதரவு
தெரிவிக்க ஆதரவாளர்கள் சென்னையில் திரண்டுள்ளனர். தமிழக மக்களுக்கு மாற்று
அரசியல் தர விரும்புவதாக ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம்
கூறியுள்ளார். தமிழ்நாட்டு மக்களின் விருப்பங்களை நிறைவேற்றும் வகையில் புதிய இயக்கம்
தொடங்கப்பட உள்ளதாக ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
மக்கள்
பிரச்சனையில் அக்கறை
தாம் மத்திய அமைச்சராக இருந்த
போது மக்களின் எண்ணங்களை பிரதிபலிப்பு முழுமையடைவில்லை என்பதே நிதர்சனமான உண்மை
என ஜி.கே.வாசன்
கூறியுள்ளார். குக்கிராமங்கள் முதற்கொண்டு தங்களது இயக்கத்தின் சேவை
தொடரும் மேலும் மக்களின் நம்பிக்கைக்கு
ஏற்றவாறு இயக்கம் இருக்கும் எனவும்
வாசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தேர்தல்
ஆணையத்தில் பதிவு
புதிய கட்சியின் பெயர் தேர்தல் ஆணையத்தில்
பதிவு செய்யப்படும் என வாசன் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment