கன்னட ராஜ்யோத்சவா தினத்தன்று பெங்களூரு மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருந்த கத்தி,
நியூ இயர் போன்ற பிற
மொழி படங்களை கன்னட அமைப்பினர்
பாதியிலே நிறுத்திய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த
1ம்தேதி கர்நாடக மாநிலம் உதயமான
ராஜ்யோத்சவா தினம் கொண்டாடப்பட்டது. அன்றையதினம்
கர்நாடக ரக்ஷனவேதிகே என்ற கன்னட அமைப்பினர்
பெங்களூருவிலுள்ள சில மல்ட்டிபிளக்ஸ் தியேட்டர்களுக்குள்
புகுந்து, அங்கு ஓடிக்கொண்டிருந்த கன்னட
மொழி அல்லாத படங்களை இடையிலேயே
நிறுத்தி ரசிகர்களை வெளியே கிளம்புமாறு கூறினர்.
ஏனெனில்
ராஜ்யோத்சவா தினத்தன்று எங்கும், எதிலும் கன்னடம் மட்டுமே
பயன்பாட்டில் இருக்க வேண்டும் என்பது
கன்னட அமைப்புகளின் கோரிக்கையாகும். எப்.எம்.களிலும்
வேறு மொழி பாடல்களை ஒலிபரப்ப
அவர்கள் விடவில்லை.
பிரவீன்
ஷெட்டி தலைமையிலான கர்நாடக ரக்ஷன வேதிகே
அமைப்பினர் ராஜாஜிநகரிலுள்ள பிவிஆர் சினிமாஸ், கன்னிங்காம்
ரோட்டிலுள்ள சிக்மா மால் மற்றும்
மக்ராத் ரோட்டிலுள்ள கருடா மால் ஆகியவற்றுக்குள்
சென்று அங்கு ஓடிய படங்களை
நிறுத்தினர்.
சிக்மா
மாலில், கத்தி திரைப்படத்தையும், பிவிஆர்
சினிமாசில் ஷாருக்கானின் ஹேப்பி நியூ இயர்
படத்தையும் இவர்கள் நிறுத்தி ரசிகர்களை
வெளியேற கூறினர். இதையடுத்து பட கட்டணத்தை தியேட்டர்
நிர்வாகங்கள் திருப்பிக் கொடுத்தன. கர்நாடக ரக்ஷனவேதிகே நிர்வாகி
ஒருவர் கூறுகையில், நவம்பர் மாதம் முழுவதுமே
கர்நாடக திரையரங்குகளில் கன்னட படங்களை மட்டுமே
திரையிட வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment