விராத்
கோஹ்லியுடன் அனுஷ்கா சர்மா நிச்சயதார்த்தம்
நடக்க உள்ளது.கிரிக்கெட் வீரர்
விராத் கோஹ்லி- பாலிவுட் ஹீரோயின்
அனுஷ்கா சர்மா இருவரும் ஷாம்பு
விளம்பர படமொன்றில் இணைந்து நடித்தனர். அப்போது
முதல் இருவரும் நெருக்கமாக பழகி வருகின்றனர். அவ்வவ்போது
வெளிநாடுகளுக்கு ஜோடியாக டேட்டிங் செல்கின்றனர்.
இருவரும் காதலிப்பதாக பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது. ஆனால் காதல் பற்றி
வெளிப்படையாக இருவரும் உறுதி செய்யவில்லை. இங்கிலாந்தில்
இந்திய அணி கிரிக்கெட் போட்டியில்
பங்கேற்றபோது விராத் உடன் அனுஷ்கா
சென்றார்.
இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கடந்த
சில தினங்களுக்கு முன் இந்தியா-இலங்கை
அணிகளுக்கிடையே நடந்த ஒரு நாள்
கிரிக்கெட் போட்டியை காண அனுஷ்கா வந்திருந்தார்.
விராத் பவுண்டரி அடித்தபோது அவருக்கு கைதட்டி உற்சாகம் ஊட்டினார்
அனுஷ்கா. ஒரு நாள் சர்வதேச
கிரிக்கெட்டில் 6 ஆயிரம் ரன்கள் அடித்து
சாதனை படைத்த விராத்துக்கு எழுந்து
நின்று கைதட்டி வாழ்த்து சொன்னார்.
அவருக்கு கிரவுண்டிலிருந்த படியே பிளையிங் கிஸ்
கொடுத்தார் விராத். தற்போது இருவருக்கும்
நிச்சயதார்த்தம் நடக்க உள்ளதாக பாலிவுட்டில்
பேச்சு எழுந்துள்ளது. இது பற்றி இரு
வீட்டாரும் சந்தித்து பேசி முடிவு செய்திருப்பதாக
கூறப்படுகிறது.
No comments:
Post a Comment