ரூம் போட்டு யோசிப்பாங்களோ?' என
கேட்கவைக்கும் பல படைப்புகளைச் சாத்தியமாக்குவது
குறும்படங்கள்தான். அந்த வகையில், '69' என்ற
மலையாளக் குறும்படத்தினை உருவாக்கியிருக்கிறார்கள்.
'சாப்பிடக்
கூடாது' என கடவுளால் அறிவுறுத்தப்பட்ட
பழத்தை ஆர்வமிகுதியில் கடித்துவிட்டாள் ஏவாள். அதனால்தான் பெண்கள்
உலகம் தோன்றியதிலிருந்து இன்றுவரை ஆண்களுக்குக் கீழ்ப்படிந்துகொண்டிருக்கிறார்கள்
என்கிற கருத்துக்கு எதிர் சிந்தனைதான் கதைக்களம்.
அதாவது,
''அந்த ஆப்பிளை ஏவாள் கடிக்காமல்,
ஆதாம் கடித்திருந்தால்?"
முதல்காட்சியில்
வீட்டுக்கு முன்பு அங்கும் இங்குமாக
புகைபிடித்தபடி ஒரு பெண் நடந்துகொண்டிருக்க,
குத்துவிளக்கை அணையாமல் கையிலேந்திக்கொண்டு வந்து நளினம் காட்டுகிறான்
ஒருவன். இப்படி ஆரம்பிக்கும் இந்தக்
குறும்படத்தின் இறுதிக் காட்சியில் பேருந்தில் பயணிக்கும்
ஒரு பெண்ணின் காதலனை, பேருந்தை இயக்கும்
மூன்று பெண்கள் சேர்ந்து பலாத்காரம்
செய்து ரோட்டில் தூக்கி வீசுவதாக முடிகிறது.
இடைப்பட்ட
காட்சிகளில் பஸ்ஸில் ஆண்களை
பெண்கள் உரசுகிறார்கள். பாடம் நடத்தும் புரொஃஸரின்
தொப்புளை பெண்கள் ரசித்துப் பார்க்கிறார்கள்.
தண்ணி அடித்துவிட்டு வீட்டில் கலாட்டா செய்வதோடு, புருஷனைப்
புரட்டி எடுக்கிறார் ஒரு பெண். பஸ்ஸில்
தொங்கியபடியே பயணிக்கிறார்கள் பெண்கள். கட் அவுட்டுக்குப் பாலாபிஷேகம்
செய்வதும், தியேட்டர் முன்பு ஆடிப்பாடி ஆட்டம்
போடுவதும் பெண்களே. தவிர, சிறுவன் ஒருவனைக்
கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம்
செய்கிறாள் ஒருத்தி. இப்படி படம் நெடுக
எதிர்மறை சிந்தனைதான். சுருக்கமாகச் சொன்னால், நம் சமூகத்தில் ஆண்களால்
பெண்களுக்கு நடந்துகொண்டிருக்கும் அனைத்து கொடுமைகளும், '69' குறும்படத்தில்
பெண்களால் ஆண்களுக்கு நடக்கிறது.
19 நிமிடங்கள்
ஓடும் குறும்படமாக இருந்தாலும், திரைப்படத்திற்கான சுவாரஸ்யம். படத்தின்
துவக்கத்தில் 'ஆதாம்-ஏவாள்' கதைக்கு
பயன்படுத்தியிருக்கும் கிராஃபிக்ஸ் காட்சிகள், பின்னணி இசை, ஒளிப்பதிவு
எல்லாமே அருமை.
கேரளாவைச்
சேர்ந்த ஃபிரோஜ் ஏ.அஜீஸ்
என்பவர் இயக்கியிருக்கும் இந்தக் குறும்படத்தினை இதுவரை
23 லட்சத்திற்கும் அதிகமானோர் ரசித்திருக்கிறார்கள். யூடியூபில் பார்க்க
No comments:
Post a Comment