அஜீத் சிறுத்தை சிவா இயக்கத்தில் மீண்டும்
நடிக்க உள்ள படத்தின் பட்ஜெட்
ரூ.80 கோடி என்று கூறப்படுகிறது.
அஜீத் தற்போது கௌதம் மேனன்
இயக்கத்தில் என்னை அறிந்தால் படத்தில்
நடித்து வருகிறார். படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது. இந்த படத்தை
அடுத்து அஜீத் தன்னை வைத்து
வீரம் படத்தை இயக்கிய சிவாவின்
படத்தில் நடிக்கிறார்.
அஜீத்,
சிவா மீண்டும் சேரும் படத்தை ஏ.எம். ரத்னம் தயாரிக்கிறார்.
அஜீத்தின் ஆரம்பம், என்னை அறிந்தால் படங்களின்
தயாரிப்பாளரும் ஏ.எம். ரத்னம்
தான். தல 56 படத்தையும் நீங்களே
தயாரித்துக் கொடுங்கள் என்று அஜீத் தான்
ரத்னத்திடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அஜீத் தற்போது நடித்து வருவது
அவருடைய 55வது படம். அதனால்
சிவா இயக்கத்தில் அவர் நடிக்க உள்ள
படத்திற்கு தற்காலிகமாக தல 56 என்று பெயர்
வைத்துக் கொள்வோம்.
தல 56 படத்தின் பட்ஜெட் ரூ.80 கோடியாம்.
விஜய் சிம்பு தேவன் இயக்கத்தில்
நடித்து வரும் படத்தின் பட்ஜெட்
ரூ.75+ கோடி என்று அதில்
நடிக்கும் சுதீப் தெரிவித்திருந்தார் என்பது
குறிப்பிடத்தக்கது.
தல 56 படத்தின் படப்பிடிப்பு பொங்கல் பண்டிகை முடிந்ததும்
துவங்குகிறதாம். படத்தில் இரண்டு ஹீரோயின்கள்.
No comments:
Post a Comment