Thursday, February 5, 2015

'என்னை அறிந்தால்' பிடிக்காதவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள்: சர்ச்சையை கிளப்பும் சிம்பு

மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமே என்னை அறிந்தால் திரைப்படத்தை நல்லாயில்லை என்று சொல்வார்கள், மற்றபடி தமிழில் வெகு காலத்திற்கு பிறகு வெளியாகியுள்ள அருமையா திரைப்படம் என்னை அறிந்தால் என்று சிலம்பரசன் கூறியுள்ளார். 

அஜித் நடித்துள்ள என்னை அறிந்தால் திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ள நிலையில், நடிகர் சிம்பு தனது டிவிட்டர் தளத்தில் இதுகுறித்து கூறியுள்ளதாவது: வெகு காலத்திற்கு பிறகு தமிழில் அருமையான ஒரு படம் வெளியாகியுள்ளது. மனநலம் பாதிக்கப்பட்டவர்களை தவிர, தமிழ் ரசிகர்கள் அனைவருக்கும் இப்படம் மிகவும் பிடிக்கும். தல அருமையாக நடித்துள்ளார். மாஸ்+கிளாஸ் நடிப்பு. இவ்வாறு சிம்பு பாராட்டியுள்ளார்.


No comments:

Post a Comment