Thursday, February 5, 2015

சேலத்தில் அஜித்துக்கு சிலை அமைத்து வேனில் எடுத்து வந்த ரசிகர்கள்

அஜீத்தின் என்னை அறிந்தால் படம் இன்று ரிலீசானது. தமிழகம் முழுவதும் 500க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் திரையிடப்பட்டது.

தியேட்டர்களில் என்னை அறிந்தால் படம் பார்க்க அதிகாலையிலேயே ரசிகர்கள் திரண்டார்கள். காலை 5 மணிக்கு சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. ஆரவாரமாக சென்று படத்தை பார்த்தனர்.

தியேட்டர்களில் ரசிகர்கள் அஜீத் கட் அவுட்கள் வைத்து இருந்தனர். கொடி தோரணங்களும் கட்டி இருந்தார்கள். அஜீத் கட்-அவுட்களுக்கு ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்தனர்.

சேலத்திலும் அஜித்தின் என்னை அறிந்தால் இன்று வெளியானது  ரசிகர்கள் அஜித்துக்கு சிலை அமைத்து அதை ஒரு மினி வேனில் எடுத்து வந்தனர். அஜித்தின் புதிய கெட்டப்பில் அந்த சிலை வடிவமைக்கபட்டு இருந்தது. 


No comments:

Post a Comment