அமிதாப்பச்சனுடன் இணைந்து தனுஷ் நடித்திருக்கும் இந்தி படம் ‘ஷமிதாப்' . இப்படத்தில் பஸ் நிலையத்தில் சிறு சிறு வேலைகளை செய்துகொண்டு திரியும் கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்கிறார். திடீரென பஸ் கண்டக்டராக வேலையும் பார்க்கிறார். பிறகு சினிமாவுக்கு வந்து ஸ்டார் ஆகிறார்.
இதையடுத்து இப்படம் ரஜினியின் வாழ்க்கை பின்னணியில் அமைக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டது.இது பற்றி தனுஷ் கூறும்போது, ‘ஷமிதாப் பட கதைக்கும் ரஜினிகாந்த் வாழ்க்கைக்கும் சம்பந்தம் இல்லை. கதைப்படி, ஹீரோ நடிக்க வருவதற்கு முன் பஸ்நிலையத்தில் கிடைக்கும் வேலைகள் செய்கிறார்.
அதில் பஸ் டிக்கெட் விற்பதும் ஒன்று. கண்டக்டராக நடித்தாலே அது ரஜினி கதை என தகவல் பரப்புவது சரியல்ல. இந்த தகவலால் இப்படம் ரஜினி வாழ்க்கை கதையா என்கிறார்கள். அப்படி இல்லை. இதெல்லாமே கதைப்படி தற்செயலாக அமைந்ததுதான்' என்றார்.
இது பற்றி இயக்குனர் பால்கி சொல்லும்போது, 'ரஜினி கதையை படமாக்க வேண்டுமென்றால் அவரிடம் அனுமதி பெற வேண்டும். அவரது வாழ்க்கை சம்பவங்களை சிறிதும் மாற்றாமல் படத்தில் நேர்மையாக கையாள வேண்டும். அதுபோல் படம் எடுக்கும் எண்ணம் எதுவும் இல்லை. இது ஏதேச்சையாக நடந்துவிட்ட ஒன்று. படம் பார்த்தால் ரசிகர்களுக்கு புரியும்' என்றார்.

No comments:
Post a Comment