தி.மு.க.வைச் சேர்ந்த 4 முன்னாள் அமைச்சர்களான பழனிமாணிக்கம் புதுக்கோட்டை ரகுபதி, முல்லைவேந்தன், அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் நெல்லை மாவட்ட முன்னாள் செயலாளர் கருப்பசாமி பாண்டியன் ஆகியோர் ஜெயலலிதா முன்னிலையில் அண்ணா தி.மு.கவில் இன்று இணைய உள்ளதாக வெளியான தகவல்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தலில் தே.மு.தி.க.வை தி.மு.க. கூட்டணியில் சேர்ப்பது தொடர்பாக அழகிரி அளித்த பேட்டி அக் கட்சிக்கு பெரும் அதிர்ச்சை ஏற்படுத்தியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அழகிரியை கட்சியில் இருந்து கருணாநிதி நீக்கினார்.
ஸ்டாலின் இன்னும் இரண்டு மாதங்களில் இறந்துவிடுவார் என்று அழகிரி கூறியதாக கருணாநிதி சொன்னதுதான் கட்சிக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தி.மு.க. முன்னாள் எம்.பி.யும், அழகிரியின் தீவிர ஆதரவாளராக நடிகர் ரித்தீஷ் கடந்தாண்டு அ.தி.மு.க.வில் இணைந்தார். இவரைத் தொடர்ந்து தி.மு.க. முன்னாள் அமைச்சர் நடிகர் நெப்போலியன் கடந்த மாதம் பா.ஜ.க.வில் தன்னை இணைத்துக் கொண்டார்.
5 பேர் போயஸ் கார்டனில்?
இவர்களைத் தொடர்ந்து தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் பழனிமாணிக்கம், ரகுபதி, முல்லைவேந்தன், அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் நெல்லை கருப்பசாமி பாண்டியன் ஆகியோர் போயஸ்கார்டனில் இன்று ஜெயலலிதாவை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பழனி மாணிக்கம்
லோக்சபா தேர்தலில் டி.ஆர்.பாலுவுடன் ஏற்பட்ட மோதலால் தொகுதியை இழந்தவர் பழனிமாணிக்கம். இவருக்கு தற்போது தி.மு.க. உயர்நிலை செயல்திட்டக் குழு பதவி கொடுக்கப்பட்டுள்ளது.
கருப்பசாமி பாண்டியன்
அ.தி.மு.க.வில் ஏற்கனவே இருந்தவர் கருப்பசாமி பாண்டியன். பின்னர் தி.மு.க.வில் இணைந்தார். பெண் ஒருவர் அவர் மீது கொடுத்த பாலியல் புகார் கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதனால் அவர் மீது கட்சி தலைமை அதிருப்பதியில் இருந்ததாகவும் கூறப்பட்டது. அவரிடம் இருந்த மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டது.
பின்னர் அவருக்கு உயர் நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. மேலும் மாவட்ட செயலாளர் பதவி தேர்தலில் கருப்பசாமி பாண்டியன் மகன் சங்கர் தோற்கடிக்கப்பட்டதால் அவர் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.
ரகுபதி
1991-96ம் ஆண்டில் அ.தி.மு.க அமைச்சர வையில் இடம் பெற்றிருந்த புதுக்கோட்டை ரகுபதி, 2000ஆம் ஆண்டில் தி.மு.க.வில் இணைந்தார். தற்போது அவரும் தி.மு.க. தலைமை மீது அதிருப்பதியில் இருப்பதாக தெரிகிறது.
அனிதா ராதாகிருஷ்ணன்
அ.தி.மு.க.வில் எம்.எல்.ஏ, அமைச்சர் என கோலோச்சிய அனிதா ராதாகிருஷ்ணன், அழகிரியால் தி.மு.க.வுக்கு அழைத்து வரப்பட்டவர். தூத்துக்குடி மாவட்ட செயலாளராக இருக்கும் பெரியசாமிக்கும், அனிதா ராதாகிருஷ்ணனுக்கும் சில ஆண்டுகாலமாகவே இருந்து வரும் மோதலால் தி.மு.க.வில் அனிதாவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. இதனால் அரசியலை விட்டு அனிதா ஒதுங்கியே இருந்து வருகிறார்.
முல்லைவேந்தன்
உட்கட்சி பூசலால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர் முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன். தற்போது அவரும் அ.தி.மு.க.வில் சேரப்போவதாக கூறப்படுகிறது.
அதிர்ச்சியில் தி.மு.க.
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் வரும் 13-ந் தேதி நடைபெற உள்ள நிலையில் தி.மு.க.வின் முன்னணி தலைவர்களான முன்னாள் அமைச்சர்கள் அண்ணா தி.மு.க.வில் இணைய இருப்பதாக வெளியான தகவல் அக்கட்சிக்கு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

No comments:
Post a Comment