ஒருகாலத்தில் ஆணானப்பட்ட சூப்பர் ஸ்டாரையே ஆடிப்போக வைத்த கட்சி பா.ம.க! பாபா படப்பெட்டியை இவர்கள் லவட்டிக் கொண்டு ஓடியதையெல்லாம் அவரும் மறக்க மாட்டார். ரசிகர்களுக்கும் ஆறாத ரணம் அது! ஆனால் அந்த கட்சியின் முக்கிய பிரமுகரை இப்போது ஆட்டமாய் ஆட்டுவிக்கிறார் ஒரு ஹீரோ. இவர் செய்த திடீர் ட்ரீட்மென்ட் மேற்படி பிரமுகரை சினிமாவை விட்டே போய்விடலாமா என்று சிந்திக்க வைத்திருக்கிறதாம்.
கோ படத்திற்கு முன்பே ஜீவாவுக்கு அட்வான்ஸ் கொடுத்திருந்தாராம் பா.ம.க பிரமுகர் ஒருவரின் மகன். இவர்கள் தயாரிப்பில் உருவாகவிருந்த படத்திற்கு அடலேறு என்று பெயரெல்லாம் வைத்து அழகு பார்த்தார்கள். கோ-வை முடித்து விட்டு உங்களுக்குதான் கால்ஷீட் என்றாராம் ஜீவா. ஆனால் கோ முடிந்த நிலையில் டேட்ஸ் கேட்டு போனவர்களுக்கு அதிர்ச்சி. என்னால இப்போ உடனே கால்ஷீட் தர இயலாது. இன்னும் ரெண்டு வருஷம் ஆகும். வேணும்னா அட்வான்சை திருப்பி வாங்கிட்டு போயிருங்க என்கிறாராம்.
தலைவருக்கு சினிமாவே பிடிக்காது. ஆனால் அவரது ஆசிர்வாதம் இல்லாமலே ஆரம்பித்த இந்த பட முயற்சி இப்படி முளையிலேயே கருகிப்போச்சே என்ற கவலை அந்த பிரமுகருக்கு. முன்பு போலிருந்தால் சத்தமாக 'மணி' ஒலிக்க விடலாம். இப்போ சூழ்நிலை சரியில்லையே என்று அமைதி காக்கிறார்களாம் பிரமுகர் தரப்பில்.
கோ ரிலீஸ் நேரத்துல பெட்டி பத்திரம்ங்க...
No comments:
Post a Comment