விஜயகாந்த் ஆதரவாளர்களுக்கும், நடிகர் வடிவேலுக்கும் இடையே கடந்த ஆண்டு மோதல் ஏற்பட்டது. அப்போது நிருபர்களுக்கு பேட்டி அளித்த நடிகர் வடிவேலு, "அடுத்த சட்ட சபை தேர்தலில் நடிகர் விஜயகாந்த் தமிழ்நாட்டில் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் அவரை எதிர்த்து போட்டியிடுவேன்'' என்று அறிவித்தார்.
இந்த நிலையில் தே.மு. தி.க. தலைவர் விஜயகாந்த் ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிடப் போவதாக அறிவித்தார். தி.மு.க. கூட்டணியில் அந்த தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப் பட்டுள்ளது. இதற்கிடையே நடிகர் வடிவேல் நேற்று முன்தினம் கருணாநிதியை சந்தித்தார். பிறகு அவர் தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து பிரசாரம் செய்யப் போவதாக அறிவித்தார்.
விஜயகாந்த் போட்டியிடும் ரிஷிவந்தியம் தொகுதியிலும் வடிவேலு பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. கருணாநிதி போட்டியிடும் திருவாரூர் தொகுதியில் இன்று (புதன்கிழமை) வடிவேலு பிரசாரத்தை தொடங்குகிறார். இதற்கிடையே ரிஷிவந்தியம் தொகுதியில் விஜயகாந்தை எதிர்த்து வடிவேலு போட்டியிடக் கூடும் என்று ஒரு தகவல் வெளியானது.
இது பற்றி வடிவேலுவிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-
விஜயகாந்துக்கு எதிராக பிரசாரம் செய்வேன். அவரை எதிர்த்து போட்டியிடுவது தொடர்பாக முடிவு எடுக்கும் முன் இன்னும் சிலருடன் ஆலோசிக்க வேண்டியதுள்ளது. அதன் பிறகு என் திட்டத்தை வெளியிடுவேன்'' என்றார். விஜயகாந்துக்கு எதிராக ரிஷிவந்தியம் தொகுதியில் வடிவேலு கிராமம், கிராமமாக சென்று பிரசாரத்தில் ஈடுபடுவார் என்று கூறப்படுகிறது.
இன்றைய பதிவுகள்....
- அனுஷ்காவுக்கு வலை விரிக்கும் சிம்பு !
- கலைஞர் தொகுதியில் கலைஞர் தலைமையில் விஜயகாந்தை விள...
- என் மூடுக்கு தகுந்த மாதிரியான கணவர் வேணும் : அசின்...
- ஆடு, கோழி, பீடிகளை பறிமுதல் செய்யும் தேர்தல் ஆணையம...
- வாக்குக்கு காசு புதிய தந்திரம் :'அடகு வைங்க, அண்ணன...
- உதயநிதி பேசிய முதல் வசனம்!
- 2006 தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பேர் டெபாசிட் இழந...
- அப்துல் கலாம் பற்றிய வதந்தியால் பரபரப்பு
- ஜெ. பிரச்சார வேனுக்கு ரகசிய பூஜை
No comments:
Post a Comment