முரசு சின்னத்தை எந்த கட்சிக்கும் ஒதுக்கக்கூடாது என்று தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி பனியன் கம்பெனி அதிபர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
மதுரை எல்லீஸ் நகரை சேர்ந்தவர் முரளிமோகன். இவர் வக்கீல்கள் எம்.எஸ்.செந்தில்குமார், ஹரிதாஸ் ஆகியோர் மூலம் மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில்,
’’நான் திருப்பூரில் பனியன் கம்பெனி நடத்தி வருகிறேன். நான் தயாரித்து வரும் பனியன்களில் "முரசு'' படத்தை அச்சடித்து விற்பனை செய்து வருகிறேன்.
முரசு படத்தை பனியன்களில் அச்சடிக்க காப்புரிமை சட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ளேன்.
சட்டமன்ற தேர்தலையொட்டி தேர்தல் ஆணையம் பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது. அதன்படி மாநில போலீசார், மத்திய பாதுகாப்பு படையினர், துணை ராணுவத்தினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
வாகனங்களில் தொழில் விஷயமாக எடுத்து செல்லப்படும் பணத்தைக் கூட போலீசார் பறிமுதல் செய்து வருகின்றனர்.
எனது கம்பெனி மூலம் தயாரிக்கப்படும் பனியன்கள் தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்யப்படுகின்றன. விற்பனைக்காக பனியன்களை எடுத்துச் செல்லும் போது ஒரு அரசியல் கட்சிக்கு ஆதரவாக பனியன்களை எடுத்துச் செல்வதாக கூறி போலீசார் வாகனங்களையும், பனியன்களையும் பறிமுதல் செய்யலாம் என்ற அச்சம் உள்ளது.
கம்பெனியை "சீல்'' வைக்கலாம் என்ற அச்சமும் உள்ளது. இதனால் எனது தொழில் கடுமையாக பாதிக்கப்படும். எனவே முரசு சின்னத்தை எந்த கட்சிக்கும் ஒதுக்கக்கூடாது என்று தேர்தல் ஆணையத்துக்கு மனு கொடுத்தேன்.
ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே முரசு சின்னத்தை எந்த கட்சிக்கும் ஒதுக்கக்கூடாது என்று தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய பதிவுகள்...
- மலையாளத்தில் பிஸியாகும் சந்தியா!
- காதல் கணவரை விவாகரத்து செய்தார் ஜோதிர்மயி!
- வைகோ கலந்துகொண்ட பார்வதி அம்மாள் அஸ்த்தி கரைப்பு வ...
- ரிஷிவந்தியத்தில் காங்., "பார்முலா' :பயத்தில் விஜயக...
- முதல்வர் தொகுதி முந்தும் அ.தி.மு.க., கூட்டணி : திர...
- தொண்டர்களுக்கு பிரியாணி விருந்து:வீடியோ கிராபர்களு...
- மே 1 மங்காத்தா படம் அல்ல !
- காங்கிரஸை எதிர்த்து தனித்துப் போட்டியிடுகிறார் சீம...
- விஜயகாந்த் முதல் அமைச்சர் என்றால், நான் பிரதமர்: வ...
- விஜய் பிரச்சாரம் செய்யமாட்டார்.. -விஜய் தந்தையின் ...
- தி.மு.க. தேர்தல் வாக்குறுதியாக மேலும் 2 புதிய சலுக...
No comments:
Post a Comment