அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா நேற்று மனுத்தாக்கல் செய்ய வந்த போது தி.மு.க.,வினருரும் வந்திருந்ததால் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டிருந்தது. ( அந்த செய்தியை படிக்க இங்கே செல்லவும் )
இந்நிலையில் ஜெயலலிதா, மனுத்தாக்கல் செய்ய திருச்சி கலெக்டர் ஆபீஸ் வளாகத்திற்குள் சென்ற போது தி.மு.க.,வினர் அ.தி.மு.க.,வினரை நோக்கி செருப்பு வீசியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து இருதரப்பும் மோதும் சூழல் ஏற்பட்டது. வன்முறை ஏதும் நிகழாமல் தடுக்க போலீசார் லேசான தடியடி நடத்தி கலைத்தனர்.
இதையடுத்து ஜெயலலிதா, செய்தியாளர்களை சந்தித்து அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அப்போது செய்தியாளர்கள் இந்த கலவரம் குறித்து கேட்டபோது,
‘’கட்சியினர் அந்த சம்பவம் பற்றி கூறினார்கள். அது பற்றி எனக்கு வேறு எதுவும் தெரியாது’’ என்று பதிலளித்தார்.
எப்படா தேர்தல் முடியும்னு தோணுது.. கட்சிக்காரங்க போடுகிற அலம்பல் தாங்கல !
ReplyDelete