தமிழில் வாய்ப்பு குறைந்த பின்னர் தெலுங்கு பக்கம் போன தமன்னா, அங்கு ஜூனியர் என்.டி.ஆருடன் ஒரு படத்தில் முத்தக்காட்சியில் நடிக்க ரூ.1.25கோடி சம்பளம் பெற்றதாக கிசுகிசுக்கிறது டோலிவுட். ஆனால் இதனை தமன்னா மறுத்துள்ளார்.
தமிழில் கடந்த ஆண்டு வரை முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் தமன்னா. விஜய், கார்த்தி, தனுஷ், ஜெயம் ரவி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஒரு ரவுண்ட் வந்துவிட்டார். கடந்த ஆண்டு மட்டும் 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த அம்மணிக்கு, இந்தாண்டு கைவசம் இருப்பது ஒரே ஒரு படம் மட்டும் தான். அதுவும் முடிந்து ரிலீஸ்க்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. டாப்ஸி, ஹன்சிகா மோத்வானி, ரிச்சா போன்ற நடிகைகளின் அதிரடி வரவால் அம்மணிக்கு வாய்ப்பு குறைந்துவிட்டது. இதனால் தெலுங்கு பக்கம் முகாமிட்டு இருக்கும் தமன்னாவுக்கு வாய்ப்புகள் குவியத் தொடங்கியுள்ளன.
இந்நிலையில் தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆருடன் உசுரவெல்லி, என்ற படத்தில் தமன்னா ஜோடி போட்டுள்ளார். இந்த படத்தில் ஜூனியர் என்.டி.ஆருக்கு உதட்டோடு உதடு முத்தக்காட்சியில் தமன்னா நடிக்க இருப்பதாகவும், இதற்காக ரூ.1.25யை சம்பளமாக பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதனை தமன்னா மறுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, உசுரவெல்லி படத்தில் ஜூனியர் என்.டி.ஆருடன், நான் முத்தக்காட்சியில் நடிப்பதாகவும், அதற்காக ஒரு பெரும் தொகையை சம்பளமாக பெற்றதாகவும் கூறப்படுவது உண்மையல்ல. எவ்வளவு பணம் கொட்டி கொடுத்தாலும் சரி, நீச்சல் உடை மற்றும் முத்தக்காட்சி போன்ற சீன்களில் நடிக்க மாட்டேன். இதுபோன்று தேவையில்லாமல் வதந்திகளை பரப்புவது என்னை சங்கடத்திற்கு உள்ளாக்குகிறது என்று கூறினார்.
உசுரவெல்லி படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா சார்பில் பி.வி.என்.எஸ்.பிரசாத் தயாரிக்கிறார். சுரேந்திர் ரெட்டி இயக்குகிறார், தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தின் சூட்டிங் விரைவில் துவங்க இருக்கிறது.
No comments:
Post a Comment