கர்நாடக முதல் அமைச்சர் எடியூரப்பா மீது முன்னாள் முதல் அமைச்சரும், ஜனதாதளம்(எஸ்) கட்சியின் மாநில தலைவருமான குமாரசாமி அடுக்கடுக்காக ஊழல் புகார்களை சுமத்தி வருகிறார். இதனால் முதல் அமைச்சர் எடியூரப்பா, என்னை சமரசம் செய்ய தூது அனுப்பினார்' என்று குமாரசாமி கூறி இருந்தார்.
ஆனால் இதை முதல் அமைச்சர் எடியூரப்பா திட்டவட்டமாக மறுத்தார். நான் தூது அனுப்பினேன் என்று தர்மஸ்தலா கோவிலில் மஞ்சுநாத சுவாமி முன் சத்தியம் செய்ய தயாரா?' என்று குமாரசாமிக்கு எடியூரப்பா சவால் விடுத்தார். அந்த சவாலை குமாரசாமியும் ஏற்றுக் கொண்டார்.
இதை தொடர்ந்து சத்திய பரீட்சை'க்கான தேதியும் நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி வருகிற 27ந் தேதி தர்மஸ்தலா கோவிலில் சத்தியம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இந்த நிலையில் முதல் அமைச்சர் எடியூரப்பா, சத்திய பரீட்சை தினத்துக்கு ஒரு நாள் முன்னதாக அதாவது 26 ந் தேதியே தர்மஸ்தலா கோவிலுக்கு செல்ல திட்டமிட்டு உள்ளார்.
பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
"தர்மஸ்தலா கோவிலுக்கு வருகிற 26ந் தேதி நான் செல்கிறேன். என்னுடன் எனது குடும்பத்தினரும் வருகிறார்கள். மறுநாள் மஞ்சுநாதா சுவாமி முன்னிலையில் சத்தியம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும். அதுவரை நான் இந்த விவகாரம் குறித்தோ அல்லது இது தொடர்பான விஷயங்கள் பற்றியோ பொது இடத்தில் பேச மாட்டேன் என்றார்.
இதேபோல குமாரசாமியும் ஒரு நாள் முன்னதாக 26ந் தேதி தர்மஸ்தலா போகிறார். இதுபற்றி அவர் கூறுகையில், நான் 26 ந் தேதி தர்மஸ்தலா செல்கிறேன். நான் மட்டும் தான் தர்மஸ்தலா போகிறேன். என்னுடன் எனது குடும்பத்தினர் யாரும் வர மாட்டார்கள் என்று தெரிவித்தார்.

No comments:
Post a Comment