நூற்றுக்கும் அதிகமான படங்களின் தயாரிப்பாளர், கதை வசனகர்த்தா, காலத்தை வென்ற பல நூறு பாடல்களை இளையராஜா இசையில் தந்தவர், இயக்குநர் என அஷ்டாவதானி.
ரஜினியை சூப்பர் ஸ்டாராக்கிய பல படங்களின் தயாரிப்பாளர் இவரே.
இந்த ஆண்டு அவருக்கு 'பீமா ரத சாந்தி' (70 வது பிறந்த நாள்). இந்த பிறந்த நாளை சமீபத்தில் கொண்டாடினார் பஞ்சு அருணாச்சலம். விழாவில் நடிகர் கமல்ஹாஸன், இளையராஜா, சோ என பலரும் பங்கேற்று அவரை வாழ்த்தினர்.
இதுகுறித்து பஞ்சு அருணாச்சலத்தின் மகன் சுப்பு கூறுகையில், "அப்பாவின் பிறந்த நாளை சொந்த ஊரான காரைக்குடியில் கொண்டாட திட்டமிட்டிருந்தோம். ஆனால் ரஜினி சாரும் அவரது நண்பர் கமல்ஹாஸனும் சென்னையில் தங்கள் முன்னிலையில் கொண்டாடப்பட வேண்டும் என விரும்பினர். ஆனால் எதிர்பாராத விதமாக ரஜினி சார் சிங்கப்பூரில் இருக்க வேண்டிய நிலை. ஆனாலும் போனில் வாழ்த்தினர் ரஜினியும் லதாவும். கமல்ஹாஸன் நேரில் வந்திருந்து வாழ்த்தினார்," என்றார்.

No comments:
Post a Comment