கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டம் வளாஞ்சேரி மங்கேரி பகுதியில் ஒரு மாடி வீடு உள்ளது. இந்த வீட்டின் படுக்கை அறை கூரைப் பகுதியில் உள்ள ஏர் ஹோல் மூலம் சம்பவத்தன்று இரவு லேசான வெளிச்சம் தென்பட்டது.
அதை பார்த்ததும், அந்த படுக்கை அறையில் கணவருடன் படுத்திருந்த மனைவி அதிர்ச்சியடைந்து அலறினார். தொடர்ந்து திருடன், திருடன் என கூக்குரல் எழுப்பப்பட்டது.
அந்த சத்தத்தைக் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடிவந்து திரண்டனர். அப்போது அங்கிருந்து 4 வாலிபர்கள் தலை தெறிக்க ஓட்டம் பிடித்தனர்.
பொதுமக்கள் விரட்டிச் சென்றதில், அவர்களில் ஒரு வாலிபர் பிடிபட்டார். அதைத் தொடர்ந்து அந்த வாலிபரை பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் அவரை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரித்தனர். விசாரணையில், பக்கத்து வீடுகளை சேர்ந்த 4 வாலிபர்கள் இணைந்து, செல்போன் கேமரா மூலம் படுக்கை அறை காட்சியை படம் பிடித்தது தெரிய வந்தது.
அதைத் தொடர்ந்து, தப்பி ஓடிய 3 வாலிபர்களையும் போலீசார் பிடித்தனர்.அவர்களிடம் இருந்து செல்போனை கைப்பற்றி போலீசார் சோதனை நடத்தியபோது அதில் படுக்கையறை காட்சி எதுவும் பதிவாகவில்லை என்பது தெரிய வந்தது.
எனினும் போலீசார் அந்த 4 வாலிபர்களையும் Qகைது செய்தனர். 4 பேர் மீதும் சைபர் குற்றம் அல்லாத புதிய பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட 4 பேரும் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

No comments:
Post a Comment