படத்தின் கதைக்கு தேவைப்பட்டால் எப்படி வேண்டுமானாலும் நடிப்பேன், என்று நடிகை த்ரிஷா கோபத்துடன் கூறியுள்ளார். நடிகை திரிஷா நடிப்பில் உருவாகியிருக்கும் தெலுங்குப்படமான தம்மு படத்தில் அவர் துணிச்சலாக கவர்ச்சி காட்டியுள்ளார். இதுவரை நடித்த கவர்ச்சி எல்லையை இப்படத்தில் தாண்டி உள்ளதாக தெலுங்கு பட உலகம் கிசு கிசுக்கிறது. ஆபாச படத்தில் நடிப்பது போன்று ஆடைகளை களைந்து ஒரு காட்சியில் நடித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அதேநேரம் புதுமுக நடிகைகளின் போட்டியை சமாளிக்கத்தான் த்ரிஷா இதுபோன்ற காட்சிகளில் நடிக்க சம்மதித்து இருப்பதாகவும் திரையுலகில் பேசப்படுகிறது. இதனால் கோபமடைந்த த்ரிஷா பேட்டியொன்றில், என்னை இளமையாக காட்ட கவர்ச்சி காட்சிகளில் துணிந்து நடிப்பதாக வெளியான செய்திகள் தவறானவை. தம்மு படத்தில் கதைக்கு தேவைப்பட்டதால் அப்படி நடித்தேன். படத்திற்கும், கதைக்கும் தேவைப்பட்டால் எப்படி வேண்டுமானாலும் நடிப்பேன், என்று கூறியிருக்கிறார்.
No comments:
Post a Comment