இப்போதைக்கு அரசியல் பற்றி எதுவும் கேட்காதீங்க என்று நடிகர் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார். நண்பன் படத்தை முடித்த கையோடு துப்பாக்கி படத்தில் பிஸியாகிவிட்டார் விஜய். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் இப்படத்தில் விஜய் ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். முற்றிலும் வித்தியாசமான கதைக்களத்துடன், ஆக்ஷ்ன் படமாக உருவாகி வரும் துப்பாக்கி படத்தின் சூட்டிங் தற்போது மும்பையில் நடந்து வருகிறது.
இந்நிலையில் வார நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்திருக்கும் விஜய் பல்வேறு விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், ஷங்கர் மற்றும் முருகதாஸ் படத்தில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய ரொம்பநாள் ஆசை. அது இப்போது தான் நிறைவேறி இருக்கிறது. ஷங்கர் சாருடன் ஒர்க் பண்ணியது ஒரு வித அனுபவம். அதேபோல் முருகதாஸின் படம் எடுக்கும் பாணி ஒருவிதம். இரண்டு பேருக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு என்று கூறியுள்ளார். மேலும் தன்னுடைய மக்கள் இயக்கம் குறித்து கூறுகையில், இரண்டு மாதத்திற்கு ஒரு தடவை தென் மாவட்டங்களில் உள்ளவர்களை ரெகுலரா சந்தித்து பேசி வருகிறேன். மக்களுக்கான நற்பணிகளை மக்கள் இயக்க சகோதரர்கள் சிறப்பாக செய்து கொண்டு வருகிறார்கள். சமீபத்தில் கூட எங்கள் இயக்கத்தினர் தானே புயலுக்கு உதவி செய்தது உங்களுக்கு தெரியும். ரசிகர் மன்றமா இருந்ததை, என் அப்பா மக்கள் இயக்கமாக மாற்றி இருக்கிறார். அதை இப்போது வலிமைப்படுத்தி கொண்டு இருக்கிறோம். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று தெரியாது. உடனே எதிர்காலத்தில் அரசியலில் குதிக்க போறதா இந்த பதிலை நீங்களா யூகம் பண்ணகூடாது. அரசியல் பற்றி இப்போதைக்கு எதுவும் கேட்காதீங்க ப்ளீஸ் என்றும், ரசிகர்கள் என்னை எப்பவும் ஆக்ஷ்ன் ஹீரோவாகத்தான் பார்க்க விரும்புவதாகவும் கூறியுள்ளார்.
இதையும் படிக்கலாமே...
No comments:
Post a Comment