'எந்திரன்' படத்தினை அடுத்து ரஜினி நடிக்க இருக்கும் படம் 'கோச்சடையான்'. படத்தைப் பற்றி பல்வேறு தகவல்கள் தமிழ் திரையுலகை ஆட்கொண்டு வருகிறது.
கோச்சடையான் படம் 3டி தொழில்நுட்பத்தில் தயாராக இருக்கிறது. இந்தியாவில் முதன் முறையாக MOTION CAPTURE TECHNOLOGY மூலம் தயாராக இருக்கும் படம் இது தான். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் வெளிவர இருக்கிறது.
ரஜினிகாந்த், சரத்குமார், ஜாக்கி ஷெராஃப், ஆதி, தீபிகா படுகோன், ருக்மணி, ஷோபனா மற்றும் பலர் நடிக்க இருக்கிறார்கள். இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு லண்டனில் நடைபெற இருக்கிறது. இதற்காக ரஜினிகாந்த் மார்ச் 21-ம் தேதி லண்டனுக்கு செல்கிறார்.
படப்பிடிப்புக்காக லண்டனில் உள்ள மூன்று பிரபல ஸ்டுடியோக்களில் பிரம்மாண்ட அரங்குகள் அமைப்பட்டு இருக்கின்றன. அங்கு தொடர்ந்து மூன்று வாரங்களுக்கு படப்பிடிப்பு நடைபெறுகிறது. அதையடுத்து மைசூர், பெங்களூர் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.
இந்நிலையில் ஒரு புதிய தகவல் ஒன்று தமிழ் திரையுலகை ஆட்கொண்டு இருக்கிறது. கோச்சடையான் படத்தில் அப்பா, மகன் என இரு வேடங்களில் நடிக்க இருக்கிறார் ரஜினி.
படம் முழுவதுமே MOTION CAPTURE என்பதால் நிஜ ரஜினி எந்த ஒரு காட்சியிலும் தெரியபோவது இல்லை. அதனால், மகன் ரஜினி வேடத்திற்கு ரஜினிக்கு பதிலாக லொள்ளு சபா ஜீவாவை பயன்படுத்த இருக்கிறார்கள். இப்படத்திற்கு மகன் வேடத்திற்கு முழுவதுமே MOTION CAPTURE கொடுக்க இருப்பது லொள்ளு சபா ஜீவா தான்.
ஜீவா ஏற்கனவே ரஜினி மாதிரியே மிமிக்ரி செய்து பல நிகழ்ச்சியில் கை தட்டல்களை அள்ளியவர். மகன் வேடத்தில் இருக்கும் காட்சிகளுக்கு ஜீவாவை MOTION CAPTURE செய்து கொள்ளலாம் என்று கூறியதே ரஜினி தானாம்.
இவருக்கு விசா, டிக்கெட் எல்லாம் தயார் செய்யப்பட்டு, இவரும் கோச்சடையான் படக்குழுவினருடன் லண்டன் பறக்க இருக்கிறார்.
இதையும் படிக்கலாமே...
No comments:
Post a Comment