"நான் 150வது திரைப்படத்தில் நடிக்க, நல்ல கதையும் தேவை, கதாநாயகியாக நடிக்க நடிகை தமன்னாவும் தேவை என, நடிகர் சிரஞ்சீவி தன் ஆசையை வெளிப்படுத்தியுள்ளார். தீவிர அரசியலுக்கு வந்த பின்னரும், சினிமாவில் நடிக்கும் ஆசை தன்னை விடவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
ஐதராபாத் டவுனில் பீப்பிள்ஸ் பிளாசா வளாகத்தில், சிரஞ்சீவியின் மகன் தெலுங்கு திரைப்பட கதாநாயகன் ராம் சரண் தேஜா நடித்துள்ள "ரச்ச (கலாட்டா) என்ற தெலுங்கு படத்தின், "சிடி வெளியீட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், நடிகர் சிரஞ்சீவியும் கலந்து கொண்டார்.
விழாவில், நடிகை தமன்னா பேசும் போது, ""ராம்சரண் தேஜா நடித்து வெளியாகிய மகதிரா , ஆரென்ஜி ஆகிய திரைப்படங்கள் போல, இந்த "ரச்ச திரைப்படமும் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெறும். ரசிகர்களின் ஆதரவு, ஆசியினால் தான் எனது குடும்பத்தினரும், மைத்துனர் அல்லு குடும்பத்தினரும், இந்த அளவுக்கு உயர்வை எட்ட முடிந்தது. ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என்றார்.
பின்னர் சிரஞ்சீவி பேசுகையில், "இந்தப் படத்தின் காட்சிகளைப் பார்த்தேன். கதாநாயகி தமன்னா தனது திறமையையும், அழகையும் வெளிப்படுத்தி நடித்துள்ளார். அவரது நடிப்பை பார்க்கும் போது, எனக்கும் உற்சாகம் ஏற்படுகிறது. ரசிகர்களின் விருப்பப்படி, நல்ல கதை கிடைத்தால், 150வது திரைப்படத்தில் நடிப்பேன். அப்போது அந்த படத்திற்கு, தமன்னாவையே கதாநாயகியாக தேர்ந்தெடுப்பேன் என, ரசிகர்களின் ஆரவார கரவொலிக்கிடையே நடிகர் சிரஞ்சீவி தெரிவித்தார்.
No comments:
Post a Comment