திரையுலக பிரபலங்கள் உதவிகளை செய்துவிட்டு அதனை செய்தியாக வெளியிடுவார்கள். ஆனால் பல்வேறு உதவிகள் செய்து வந்தாலும் இதுவரை அஜீத் செய்த உதவிகள் பற்றி செய்திகள் வெளிவந்தது இல்லை.
எந்த ஒரு உதவி செய்தாலும் அதன் மூலம் தன்னை விளம்பரப்படுத்தி கொள்ளாதவர் அஜீத். இதனால் அவர் செய்து வரும் உதவிகள் எதுவும் வெளியே தெரிவது இல்லை.
இந்நிலையில் கடந்த வருடம் பிறந்தநாள் அன்று தனது ரசிகர் மன்றத்தினை கலைத்தார். அது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அரசியல் சார்பற்ற ஒரு புதிய தன்னார்வ தொண்டு நிறுவனம் ( NGO ) ஒன்றை அஜீத் தொடங்க திட்டமிட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அப்படி எந்த ஒரு எண்ணமும் அஜீத்திற்கு இல்லையாம். தன்னால் முடிந்த உதவிகளை சத்தமில்லாமல் செய்வதைத் தொடர இருக்கிறாராம்.
இப்போதைக்கு அஜீத்தின் ஆர்வம் 'பில்லா 2' படத்தில் தான் இருக்கிறதாம். இதுவரை எந்த ஒரு படத்திற்கும் இல்லாத அளவிற்கு 'பில்லா 2' படத்தில் கஷ்டப்பட்டு நடித்திருக்கிறாராம். ஹெலிகாப்டர், ரயில் என சண்டைக்காட்சியில் டூப் போடாமல் தானே நடித்து கொடுத்து இருக்கிறார்.
'கொசுறு' கபாலி : 'மங்காத்தா' படக்குழுவினருக்கு அளித்த பிரியாணி விருந்தை 'பில்லா 2' படக்குழுவிற்கும் அளித்து அசத்தி இருக்கிறார் தல!
இதையும் படிக்கலாமே ....
தப்பித்தது தமிழகம்.போர்க்குற்றங்கள் படிச்சிடோம்.ஆனாலும் நம் உறவுகளின் துயர் துடைக்க முடியவில்லையே!
ReplyDelete