டெல்லியில்
ஆட்சி அமைக்க எந்த அரசியல்
கட்சியும் முன்வராதது காரணமாக சட்டசபையை கலைக்க
துணைநிலை கவர்னர் நஜீப் ஜங்,
ஜனாதிபதியிடம் பரிந்துரை செய்துள்ளார்.
சுப்ரீம்
கோர்ட்டு உத்தரவு
டெல்லியில்
அரவிந்த் கெஜ்ரிவால் பதவி விலகியதை தொடர்ந்து
அங்கு சட்டசபை முடக்கப்பட்டு, கடந்த
பிப்ரவரி 17–ந்தேதி முதல் ஜனாதிபதி
ஆட்சி அமல்படுத்தப்பட்டு உள்ளது. இங்கு தேர்தல்
நடத்த உத்தரவிடுமாறு அரவிந்த் கெஜ்ரிவால் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம்
கோர்ட்டு, டெல்லியில் ஆட்சியமைப்பது தொடர்பாக நவம்பர் 11–ந்தேதிக்கு முன் முடிவு எடுக்குமாறு
மாநில துணைநிலை கவர்னருக்கு சமீபத்தில் உத்தரவிட்டது. இதனால் டெல்லி அரசியலில்
மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது. டெல்லியில் தனிப்பெரும் கட்சியாக விளங்கி வரும் பா.ஜனதாவை ஆட்சியமைக்க அனுமதிக்குமாறு
துணைநிலை கவர்னர் நஜீப் ஜங்,
கடந்த சில நாட்களுக்கு முன்
ஜனாதிபதிக்கு கடிதம் எழுதினார். பா.ஜனதா கூட்டணிக்கு 29 எம்.எல்.ஏ.க்களின்
(பா.ஜனதா 28, அகாலிதளம் 1) பலம் உள்ளது.
இதற்கு
ஜனாதிபதியும் ஒப்புதல் அளித்து விட்டதாக சுப்ரீம்
கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்தது.
எனவே டெல்லியில் பா.ஜனதா ஆட்சி
அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆரசியல்
கட்சிகள் விரும்பவில்லை
ஆனால் ஆட்சியமைக்க போதுமான பலம் இல்லாததாலும்,
அதற்கான எம்.எல்.ஏ.க்களை (36 எம்.எல்.ஏ.க்கள்) வலுக்கட்டாயமாக திரட்ட
விரும்பாததாலும், டெல்லியில் ஆட்சியமைக்க பா.ஜனதா விரும்பவில்லை.
ஏனெனில்
அவ்வாறு ஆட்சியமைத்தால் கட்சியின் நற்பெயருக்கும், மத்தியில் அமைந்துள்ள மோடி தலைமையிலான அரசுக்கும்
களங்கம் ஏற்படும் என மாநில தலைமை
எண்ணுகிறது. எனவே டெல்லியில் ஆட்சியமைக்க
பா.ஜனதா ஆர்வம் காட்டவில்லை.
இவ்வாறு
டெல்லியில் ஆட்சியமைக்க எந்த கட்சியும் விரும்பாததால்,
மாநிலத்தில் அரசு அமைப்பது தொடர்பாக
விவாதிக்க பா.ஜனதா, ஆம்
ஆத்மி, காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் நிர்வாகிகளுக்கு
துணைநிலை கவர்னர் அழைப்பு விடுத்தார்.
நேற்று துணைநிலை கவர்னரை சந்தித்து பேசியபோது
டெல்லியில் சட்டசபையை கலைத்து விட்டு புதிய
தேர்தல் நடத்துமாறு அரசியல் கட்சிகள் கேட்டுக்கொண்டன.
அரசியல் கட்சிகள் தங்களால் ஆட்சி அமைக்க முடியாது
குறித்தான காரணத்தையும் தெரிவித்துக் கொண்டன.
ஜனாதிபதிக்கு
கடிதம்
இவ்வாறு
எந்த கட்சியும் டெல்லியில் ஆட்சியமைக்க விரும்பாததால், மாநில நிலவரம் குறித்த
அறிக்கையை விரைவில் ஜனாதிபதிக்கு, துணைநிலை கவர்னர் நஜீப் ஜங்
அனுப்பி வைத்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
டெல்லியில்
ஆட்சியமைக்க எந்த கட்சியும் விரும்பாததால்,
அங்கு சட்டசபையை கலைக்க துணைநிலை கவர்னர்
நஜீப் ஜங் பரிந்துரை செய்துள்ளார்.
இதற்கிடையே
டெல்லியில் சட்டமன்றத் தேர்தல் நடத்துவது தொடர்பாக
மாலை மத்திய அமைச்சரவை கூடி
முடிவு எடுக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
டெல்லி
சட்டசபையை உடனடியாக கலைத்து விட்டு, காஷ்மீர்,
ஜார்கண்ட் மாநிலங்களுடன் சேர்த்து டெல்லியிலும் தேர்தல் நடத்த வேண்டும்.
என்று நேற்று காங்கிரஸ் கட்சி
வலியுறுத்தியது.
No comments:
Post a Comment