போட்டோவுக்கு
போஸ் தருவதற்கு பதில் குத்தாட்டம் எளிதாக ஆடி விடலாம் என சலித்துக்கொண்டார் இலியானா.படப்பிடிப்பின்போது
முக்கிய காட்சி, பாடல் காட்சிகள் படமாக்கியபிறகு அந்த காட்சியை விளம்பரப்படுத்துவதற்காக
போட்டோ செஷன் நடக்கும். தோற்றத்தில் மாற்றம் அல்லது புது காஸ்ட்யூம் அணிந்த பிறகும்
போட்டோவுக்கு ஹீரோயின்கள் போஸ் தரவேண்டி உள்ளது.
இதுபற்றி இலியானா
கூறும்போது,‘போட்டோவுக்கு போஸ் தருவது கஷ்டமான வேலைதான். போட்டோ பிடித்து முடிக்கும்வரை
எந்த ஸ்டைலில் நிற்கிறோமோ அதே ஸ்டைலில் நின்றுகொண்டிருக்க வேண்டும். இதைவிட குத்தாட்டம்
ஆடுவது எவ்வளவோ எளிது. தொடர்ச்சியாக காட்சிகள் படமாகிக்கொண்டிருப்பதால் நொடிக்கு நொடி
முகபாவனைகளை மாற்றிக்கொண்டு ஆடினால் போதும். என்னைப் பொறுத்தவரை போட்டோவுக்கு போஸ்
தருவதைவிட குத்தாட்டத்தை எளிதாக ஆடிவிட்டு சென்றுவிடுவேன் என்றார்
No comments:
Post a Comment